Ad

திங்கள், 25 அக்டோபர், 2021

சாலையில் கிடந்த பாலியல் தொழிலாளியின் சடலம்; கைதான கணவன்- மனைவி; நடந்தது என்ன?

மத்தியபிரதேசத்தில் உள்ள குவாலியர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பந்து பதுரியா. இவரின் மனைவி மம்தா. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு குழந்தையில்லாத காரணத்தால், குழந்தை வரம் வேண்டி கோயில்களுக்குச் சென்று வந்தனர். மம்தாவின் சகோதரியான மீராவின் நண்பர் நீரஜ், பந்து-மம்தா தம்பதியை கிர்வார் யாதவ் என்ற பில்லி சூனியம் வைக்கும் சாமியாரிடம் அழைத்து சென்றார். ``உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டுமானால் நரபலி கொடுக்கவேண்டும்'' என்று யாதவ் மம்தாவிடம் தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி பெண் ஒருவரின் சடலம் குவாலியரில் கிடைத்திருக்கிறது. அதனைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவர் பாலியல் தொழிலாளி என்று தெரிய வந்தது. இதையடுத்து மேற்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தியதில் அப்பெண்ணை நீரஜ் அழைத்து சென்றது தெரிய வந்தது.

Also Read: ``உன்னை நரபலி கொடுக்கப் போகிறேன்" மந்திரவாதியுடன் வீட்டுக்கு வந்த கணவன்; அதிர்ந்த மனைவி!

murder

அப்பெண்ணை நீரஜ், கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார். பின்னர் அப்பெண்ணின் சடலத்தைத் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு, பூஜை செய்வதற்காக யாதவிடம் கொண்டு சென்றிருக்கிறார். அப்போது விபத்து ஏற்படவே, பயந்து போன நீரஜ் சம்பவ இடத்தில் சடலத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கிறார். மேற்கொண்டு போலீஸ் நடத்திய விசாரணையில், நீரஜ் ஒரு வாரத்திற்கு முன்பே வேறொரு பாலியல் தொழிலாளியை இதேபோல கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து மம்தா, அவரது கணவர் பந்து, மம்தாவின் சகோதரி மீரா, மீராவின் ஆண் நண்பர் நீரஜ், சாமியார் யாதவ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சாமியார் யாதவ், ``தான் நரபலி கொடுக்கவில்லை" என்று தெரிவித்திருக்கிறார். போலீஸார் கைது செய்தவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/in-madhya-pradesh-a-couple-who-have-been-married-and-childless-for-18-years-have-killed-two-women

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக