Ad

வெள்ளி, 7 மே, 2021

மாறிவரும் சூழல்... குடும்பத்தைக் கையாள்வது எப்படி? -சுதா மூர்த்தியின் அன்னையர் தின சிறப்புரை #WowMom

அன்னையர் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் பெல்லா சானிட்டரி நாப்கின் இணைந்து சிறப்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியை இணைந்து வழங்குபவர்கள் பிரித்வி உள்ளாடைகள்.

Mother

இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்தியாவில் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸை ஆரம்பகாலம் தொட்டு வளர்த்தெடுத்தவர்களில் முக்கியமானவர். கோடிகளில் புரண்டாலும் நடுத்தர வர்க்கத்தின் மதிப்பீடுகளோடு வாழ்க்கையை முன்னெடுப்பவர்.

இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் மூலம் பல ஊர்களில் நூலகங்கள் அமைத்துக்கொடுத்தவர். நமது நாடு கோவிட் பெருந்தொற்றைக் கையாள்வதற்கும் அறக்கட்டளையின் மூலம் தோள்கொடுத்து வருகிறார்.

Sudha Murthy

அன்னையர் தின சிறப்புரையில் வீட்டையும் வேலையையும் திறம்பட நிர்வகிப்பது, மாறி வரும் சூழலில் குடும்பத்தினரிடம் பிணைப்பை அதிகரிப்பது எப்படி, தலைமுறைகளைத் தாண்டி உள்ளங்களைப் புரிந்துகொள்ளுதல் எப்படி உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசவுள்ளார். சுதா மூர்த்தி அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய ஆங்கிலத்தில் பேசுவார்.

அன்னையர் தினமான மே 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 முதல் 6 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.

சுதா மூர்த்தி பங்கேற்கும் அன்னையர் தின சிறப்புரை

இணைய வழி நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/lifestyle/women/mothers-day-special-lecture-by-infosys-foundation-sudha-murthy-wow-mom

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக