Ad

சனி, 29 மே, 2021

முதல்வர் நிவாரண நிதி: பி வெல் மருத்துவமனை ரூ.10 லட்சம் நிதியுதவி!

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பி வெல் மருத்துவமனை ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது.

பி வெல் மருத்துவமனையின் நிறுவனர்களும் மற்றும் நிர்வாக இயக்குநர்களுமான CJ.வெற்றிவேல் மற்றும் SK வெங்கடராமன் ஆகியோர் இணைந்து திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினை மே 26 அன்று சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

தமிழக மக்களின் நலன், பி வெல் மருத்துவமனையின் முன்னுரிமை, அதற்குச் சான்றாக இந்த நன்கொடை அமைகிறது!



source https://www.vikatan.com/oddities/miscellaneous/bewell-hospital-donates-rs-10-lakhs-to-cm-covid-relief-fund

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக