தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, சென்னையை விட கோவையில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுகாதாரத்துறை அமைச்சரும் கோவையில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று கொங்கு மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்து #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேஷ்டேக் ஒன்று தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடிப்பதும் இது முதல் முறை எனச் சொல்லப்படுகிறது.
இதனிடையே கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலின் கவச உடை அணிந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/cm-stalin-kovai-visit-go-back-stalin-trending-in-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக