Ad

வெள்ளி, 28 மே, 2021

கோவிட் இரண்டாம் அலையும் மனநலமும்! - அவள் விகடனின் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

கோவிட் இரண்டாம் அலையின் தாக்கம் ஏதாவது ஒருவகையில் நம்மை தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. நாம் பாதுகாப்பாக இருந்தாலும் நாம் கேள்விப்படும் விஷயங்கள் நம் மனதை அலைக்கழிக்கவே செய்கின்றன. கோவிட் பாதித்தவர்களுக்கும் க்வாரன்டீனிலிருப்பவர்களுக்கும் மனச்சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

Mental Health

குடும்பத்தினருக்கு பாதிப்பு, உறவுகளின் இழப்பு, நிலையற்ற தன்மை, பொருளாதார சிக்கல், வீட்டிலேயே அடைந்து கிடப்பது போன்ற பல்வேறு காரணங்களால் ஏதாவது ஒரு வகையில் நம் மனஅமைதி தடைப்படுகிறது. இதுபோன்ற கடினமான சூழலில் மனநலத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

உடல்நலம் பாதிக்கப்பட்டால் மனநலமும் பாதிக்கப்படுவதுபோல, மனநலத்தில் பிரச்னை ஏற்பட்டால் உடல்நலமும் பாதிக்கப்படும். எனவே, மனதை இலகுவாக வைக்க வேண்டியவது அவசியம். இதுபோன்ற சூழல்களைக் கையாள அவள் விகடன் சார்பில் `கோவிட் 2-ம் அலையும்...மனநலமும்!' என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

Covid-19 Pandemic

ஜூன் 2-ம் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஆர். வசந்த் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கவுள்ளார். மனநல மருத்துவத் துறையில் 14 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் மருத்துவர் வசந்த். துறை சார்ந்த ஆராய்ச்சிக்காக சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார்.

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான மனநல பிரச்னைகளைக் கையாள்வதிலும் நிபுணத்துவம் பெற்றவர். கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் அது தொடர்பான மனநல பிரச்னைகளுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். நிலையற்ற சூழலில் மனநலத்தைப் பேண வேண்டியதன் அவசியம், கோவிட்-19 பாதித்தவர்களுக்கு ஏற்படும் மனநல பிரச்னைகள், மனஅழுத்தத்திலிருந்து விடுபட எளிய வழிகள் உள்ளிட்ட விஷயங்களுக்கு ஆலோசனைகள் வழங்கவுள்ளார்.

கோவிட் 2-ம் அலையும் மனநலமும்

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் மருத்துவர் நேரடியாகப் பதிலளிப்பார். இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/health/healthy/aval-vikatan-webinar-on-importance-of-mental-health-during-the-pandemic

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக