Ad

சனி, 8 மே, 2021

மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இலவச பஸ் பயணம்: `உரிய முடிவு விரைவில்!’-ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் பதில் #NowAtVikatan

`கவனப்படுத்தியமைக்கு நன்றி... விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்!’ - ஸ்டாலின்

தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஸ்டாலின், முதல் நாளில் ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் முக்கியமான ஒன்று, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்வதற்கான உத்தரவு. அது இன்று முதல் அமலுக்குவந்தது. மகளிர் பலரும் இந்த உத்தரவுக்கு மகிழ்ச்சி தெரிவித்துவரும் நிலையில், ட்விட்டரில் ஊடகவியலாளர் இந்துஜா ரகுநாதன் என்பவர், முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து, ``பெண்களுடன், திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயணத் திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும்” எனப் பதிவிட்டார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ``மகளிர்நலன், உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கருணாநிதி காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப்போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்” என்றார்.

இன்றும் நாளையும் பஸ்கள் இயக்கம்!

டாஸ்மாக்

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதைத் தொடந்து தற்போது புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு இன்று காலை வெளியிட்டது. அதன்படி வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் சலூன் கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே போன்று இன்று (சனி) , நாளை (ஞாயிறு) அரசு பஸ்கள் 24 மணி நேரம் ஓடும். இது, முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் மதுபான கடைகள் இன்றும் நாளையும் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

`ஐந்து மாவட்டங்களில் ரெம்டெசிவிர்!’

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு இன்று காலை வெளியிட்டது. இதற்கிடையே சென்னை ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

அமைச்சர் ஆய்வு

ஆய்வை முடித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்ஸிஜன் வசதிகொண்ட படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் முதல்வர் ஊரடங்கு அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு சித்தா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முன் ளப் பணியாளர்களுக்கு சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் விற்பனைபோல் இந்த ஐந்து மாவட்டங்களிலும் நாளை முதல் விற்பனை நடைபெறும். தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. மேலும் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/08-05-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக