Ad

சனி, 8 மே, 2021

"நாங்க என்ன பேங்க்கா நடத்துறோம்..." விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களுக்குப் புது சிக்கல்!

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக லாக்டெளன் போடப்பட்டு, தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் மீண்டும் நேரடி ஓடிடி ரிலீஸ் பஞ்சாயத்துகள் ஆரம்பித்திருக்கின்றன. கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையின்போது சூர்யா சொந்தமாகத் தயாரித்த 'பொன்மகள் வந்தாள்', 'சூரரைப் போற்று' என இரண்டு படங்களையும் நேரடியாக அமேஸான் ப்ரைமில் ரிலீஸ் செய்தார். 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேஸானில் வெளியானப்பிறகு, சேட்டிலைட் உரிமை வாங்கியிருந்த சன் டிவியிலும் ஒளிப்பரப்பானது.

அதேபோல் இப்போது விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்', சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படங்களை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் நேரடி ஓடிடி ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் போட்டது. ஓடிடி உரிமையோடு சேட்டிலைட் உரிமையும் சேர்த்துத்தான் டிஸ்னி ஹாட்ஸ்டார் டீல் பேசியிருக்கிறது. ஆனால், இந்த இரண்டு படங்களின் டிவி உரிமையும் ஏற்கெனவே சன் டிவிக்கு விற்கப்பட்டுவிட்டது.

டாக்டர் - சிவகார்த்திகேயன்

"மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் நாங்கள் நேரடி ஓடிடி ரிலீஸுக்குப்போகிறோம்" என இந்தப்படத்தின் தயாரிப்பு தரப்பு, டிவி நிர்வாகத்தை அணுகி விற்கப்பட்ட படங்களை மீண்டும் கேட்டிருக்கிறது. ஆனால், டிவி தரப்போ, "நீங்க தேவைப்படுற நேரத்துல வந்து கொடுத்துட்டு, திரும்ப உங்களுக்குத் தேவைப்படுற நேரத்துல கேட்டா கொடுக்குறதுக்கு நாங்க என்ன பேங்க்கா நடத்துறோம். டிவி உரிமத்தை திருப்பித்தர முடியாது" என மறுத்திருக்கிறது. இதனால் இப்போது இரண்டு படங்களுமே ஓடிடி-யிலும் ரிலீஸ் ஆவதிலும் சிக்கல் எழுந்திருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் தியேட்டர்கள் திறப்பு என்பது இந்த ஆண்டு அக்டோபருக்கு மேல்தான் இருக்கும் என்கிறார்கள்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/issue-regarding-the-ott-release-of-doctor-and-tughlaq-darbar-movies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக