திடீர் விசிட் அடித்த ஸ்டாலின்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருந்தாலும் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா வார் ரூமிற்கு முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு திடீர் விசிட் அடித்தார். அப்போது அங்கு நடைபெறும் பணிகளை கண்காணித்தார். அந்த நேரம் உதவி கோரி வந்த அழைப்பு ஒன்றுக்கு, `நான் ஸ்டாலின் பேசுறேன்’ என தானே பதில் அளித்து தேவையான உதவிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.



இந்த வார் ரூம் மூலம் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இருப்பு விவரத்தினை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அனைத்து அழைப்புகளுக்கும் முறையான உதவி மற்றும் ஆலோசனைகள் தடையில்லாமல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழகத்தில் படுக்கைகள் - மருந்து கையிருப்பு - உயிர்வளி ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கொரோனா கட்டளை மையத்தை (War Room) பார்வையிட்டேன்.#Covid19 கட்டுப்படுத்தலில் தமிழகத்தில் நிலவி வந்த
— M.K.Stalin (@mkstalin) May 14, 2021
குழப்பங்களை சீராக்கி திறனுடன் கையாளும் பாதையில் வெகு விரைவாக பயணிக்கிறோம். pic.twitter.com/0O2URuDTiv
source https://www.vikatan.com/news/general-news/15-05-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக