Ad

வெள்ளி, 14 மே, 2021

கொரோனா நிவாரண நிதியாக ரூ.11 கோடி திரட்டிய விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா... எப்படிச் சாத்தியமானது?

நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாநிலமும் ஆக்சிஜன், சிகிச்சைக்கான மருந்துகள் போதிய அளவு கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றன. மற்றொரு புறம் பொதுமுடக்கத்திற்கு நிகரான கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் வேலைவாய்ப்புக்களை இழந்து வருமானம் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து கொரோனா நிவாரண நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டார். இதற்கான திட்டத்தை மே 7-ம் தேதி கோலி தொடங்கிவைத்து தங்களது பங்களிப்பாக ரூ.2 கோடியை வழங்கினார். ஆரம்பத்தில் 7 கோடி ரூபாய் திரட்ட விராட் கோலி இலக்கு நிர்ணயித்திருந்தார். ஆனால் ஒரு சில நாள்களில் 7 கோடி ரூபாய் இலக்கை எட்டிவிட்டார். இதனால் தனது இலக்கை ரு.11 கோடியாக அதிகரித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கோலி - அனுஷ்கா

தற்போது ரு.11 கோடி இலக்கை எட்டிவிட்டதாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "கொரோனாவிற்கு நிதி திரட்டும் எங்களது முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் கொடுத்த ஆதரவை சொல்ல வார்த்தைகளே இல்லை. எங்களது இலக்கை இரண்டு முறை எட்டியிருக்கிறோம். இதற்காக ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நன்கொடை வழங்கிய மற்றும் இது தொடர்பான செய்தியை ஷேர் செய்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை அனுஷ்கா ஷர்மாவும் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். "நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு வாரத்தில் 11 கோடியை எட்ட முடிந்தது. இதற்காக நீங்கள் அனைவரும் காட்டிய ஒத்துழைப்பு உண்மையிலே மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது. மக்களுக்கு உதவிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் சேர்ந்து கொரோனா நிவாரண நிதியாக ஒரு மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளார்.

Priyanka Chopra -husband Nick Jonas

இது இந்திய கரன்சியில் ரூ.7.36 கோடியாகும். ஆனால், தற்போது 3 மில்லியன் டாலர் நிதி திரட்டப்போவதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தரப்பினரும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க சீக்கிய அமைப்பு ஒன்றுக்கு ரு.1 கோடி நன்கொடை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/india/captain-virat-kohli-and-anushka-sharma-raise-rs-11-crore-as-corona-relief-fund

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக