கொட்டில் முறை வளர்ப்பு
நவீன முறை வெள்ளாட்டு கொட்டகை
அமைத்தல்
வெள்ளாடு வளர்த்தல் வணிக ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதிய
தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் மட்டுமே
நாம் வெள்ளாடு வளர்ப்பை ஒரு தொழிலாக செய்ய முடி.யும்.
கொட்டில் முறை வளர்ப்பு
நம் நாட்டில் பொதுவாக மேய்ச்சல் முறை உள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட முறையாக
கொட்டில் முறை உள்ளது. வெற்றிகரமாக வெள்ளாட்டு பண்ணை அமைக்க இரு
முறைகளும் கலந்த முறையே சிறந்ததாகும்.
மேய்ச்சல் முறையில் ஆடுகளுக்கு நல்ல உடற்பயிற்சி கிடைக்கும். இம்முறையில்
சுமார் 4 முதல் 5 மணி நேரம் ஆடுகள் மேய்ச்சலுக்கு, செல்லும். பிறகு மேம்படுத்தப்பட்ட கொட்டில்
முறையில் ஆடுகளை அடைத்து பசுந்தீவனம் மற்றும் அடற்தீவனம் அளித்து பராமரிக்கலாம். இம்முறையில் சில நன்மைகள் உண்டு. அதாவது,
ஆடுகள் சுகாதரணமான முறையில் வளரும். நாய்,
பாம்பு, பூச்சிகள் போன்றவைகளிடமிருந்து பாதுகாக்கப்படும்.
தரையைப்பராமரிப்பது
எளிது, மேலும், சிறந்த பொலிகிடாக்களைக் கொண்டு, ஆரோக்கியமான பெட்டை ஆடுகளை தயார்
செய்து, கொட்டிலிலேயே இனவிருத்தி செய்யலாம்.
மேலும், தண்ணீர் வசதி, தீவண தொட்டில் ஆகிய வசதிகள் கொட்டிலிலேயே செய்யலாம்.
நவீன கொட்டில் அமைப்புகள்
1)
பிளாஸ்டிக் தரை அமைப்பு
2)
தீவனம் இடும் வாய்க்கால் அமைப்பு
3)
ஆடுகளுக்கான பாதை
4)
ஆடுகளுக்கான கொட்டில் அமைப்பு
5)
கொட்டில் அமைப்பில் தண்ணீர் வசதி
6)
கொட்டில் அமைப்பு வெளித்தோற்றம்
தீவன பழக்கங்கள்
வெள்ளாடுகள் வித்தியாசமான உணவு பழக்கங்கள் கொண்டவை. தீவனம் சுத்தமானதாகவும், உலர்ந்தவாறும்,
புதியதாகவும் இருப்பதை விரும்பி உண்ணும், ஈரமான மற்றும் மண் தீவனங்களை உண்ணாது.
வெள்ளாடுகளுக்கு தீவனத்தில் 40-50 சதவீதம் பலதரப்பட்ட மர இலைகளை கொடுக்க
வேண்டும். சத்து நிறைந்த மரங்களான கொடுக்காய்ப்புளி, கல்யாண முருங்கை, வேம்பு,
கருவேல், ஆலமரம், அரசமரம், மா, பலா, வெள்வேல், இலந்தை, வாகை போன்ற மரங்களை
வளர்த்து அளிக்கலாம்.
புரசத்து நிறைந்த வேலி மசால், சணப்பு, கோ.எப.எஸ் 29, சோளம், கோ – 4 மற்றும் கோ
– 5, முயல் மசால், கினியா புல் மற்றும் கொளுக்கட்டைப்புல் போன்ற புல் வகைகளையும்
பயிர் செய்து கொடுக்கலாம்.
மழைக்காலங்களில் சரியான தீவனம் கிடைக்காத போது, சரி விகித கலப்புத் தீவனம்
அளிக்க வேண்டும். சினைக்காலத்தில் கடைசி
30 – 45 நாட்கள் வரை சிறப்பு கலப்புத்தீவனம் கொடுக்க வேண்டும்.
இனப்பெருக்கம்
இரண்டு பல் உடைய பெட்டை வெள்ளாடுகளை சிறந்த பண்னைகளில் இருந்து வாங்க
வேண்டும். நெஞ்சுபகுதியவிட அகன்ற இடுப்புப் பகுதி, நீலமான உடல் உள்ள ஆடுகளை தேர்வு
செய்ய வேண்டும். இரண்டு வருடங்களுக்கு ஒரு
முறை கிடாக்களை மாற்ற வேண்டும்.
பெட்டை ஆடுகள் சுமார் 7 – 9 மாதங்களில் பருவம் அடையும். சுமார் 18 – 21 நாட்களுக்கு ஒரு முறை
பருவத்திற்கு வரும். பருவ அறிகுறி தென்பட்ட 24 மணி நேரத்தில் கிடாவை சேர்க்க
வேண்டும். சினைக்காலம் 145 முதல் 155 நாட்களாகும். இவ்வாறு செய்வதனால்
இரண்டு ஆண்டுகளில் மூண்று முறை குட்டி ஈட்ட முடியும்.
வெள்ளாட்டு வளர்ப்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
!!!
மணிகன்டன் . S
7806868636
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக