Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

பாலகிருஷ்ணா ரசிகர்களே..! கன்ட்ரோல் கன்ட்ரோல்..! ஆஸ்திரேலிய, அமெரிக்கத் திரையரங்கில் பரபரப்பு:

நடிகர் பாலகிருஷ்ணா - இயக்குநர் பொயப்படி ஶ்ரீனு கூட்டணியில் ஒரு படம் மீண்டும் உருவாகிறது என்ற அறிவிப்பு வந்த நாள் முதல் அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. காரணம், இதே கூட்டணி இதற்கு முன் 'லெஜண்ட்', 'சிம்ஹா' என இரண்டு ப்ளாக்பஸ்டர்களை கொடுத்திருக்கிறார்கள். #BB3 என்ற ஹேஷ்டாக்குடன் தொடங்கியது படப்பிடிப்பு. #BB3 என்றால் Balakrishna - Boyapati Sreenu இணையும் மூண்றாவது படம் என்றும் BlockBuster 3 என்றும் அர்த்தம். 'அகண்டா' என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் சில முக்கிய காட்சிகள் திருவண்ணாமலையில் படமாக்கியிருக்கின்றனர். பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட காத்திருந்த சூழலில் லாக் டெளன்கள் வந்துவிட்டன. பிறகு, படத்தை முடித்து வெற்றிகரமாக உலகமெங்கும் வெளியானது.

கமர்ஷியல் எண்டர்டெயினருக்கு பெயர் போன பாலகிருஷ்ணாவின் இந்தப் படத்திற்கும் செம வரவேற்பு. ஆஸ்திரேலியாவில் 'அகண்டா' திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போது அங்கிருக்கும் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் சிலர் 'ஜெய் பாலையா' என கோஷங்களை எழுப்பிக்கொண்டே படம் பார்த்துள்ளனர். படத்தை கொண்டாடுகிறார்கள் என்று கொஞ்சம் பொறுமையாக இருந்த திரையரங்கு நிர்வாகிகள். ஆனால், இவர்களின் உற்சாகம் எல்லை மீறிப் போக, படத்தை பாதி நிறுத்தி, அரங்கத்திற்குள் வந்து, பாலகிருஷ்ணா ரசிகர்களிடம் அவர்களின் உற்சாகத்தை கட்டுப்படுத்த சொல்லியிருக்கின்றனர். அந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


தவிர, அமெரிக்காவில் சினிமார்க் என்ற தியேட்டரில், ''அகண்டா பட பார்வையாளர்களுக்கு... இங்கே அமைக்கப்பட்டிருக்கும் ஸ்பீக்கர்கள் சேதமடைய கூடாது என்பதற்காக குறிப்பிட்ட டெசிபலுக்கு கீழ்தான் ஒலி இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு திரையிடப்பட்டும் எல்லா படங்களுக்கும் இதே அளவுதான் ஒலி இருக்கும். அதனை உயர்த்தப்படமாட்டாது'' என்று போர்டு வைத்திருக்கிறார்கள்.

பாலகிருஷ்ணா ரசிகர்களே...! கன்ட்ரோல் கன்ட்ரோல்..!



source https://cinema.vikatan.com/tamil-cinema/theartre-in-australia-warned-balakrishna-fans-to-control-theor-excitement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக