Ad

வெள்ளி, 3 டிசம்பர், 2021

உச்சம் தொட்ட கிரெடிட் கார்டு பரிவர்த்தனை; ஒரே மாதத்தில் ₹1 லட்சம் கோடியைத் தாண்டியது; என்ன காரணம்?

நம் நாட்டில் முதல்முறையாக கிரெடிட் கார்டுகளின் மூலமாக செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் மதிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஒரு ட்ரில்லியன் ரூபாயை அதாவது, ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே மாதந்தோறும் இத்தகைய கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தாலும், கடந்த அக்டோபர் மாதம் மட்டும் இந்த எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளது.

Credit Card

Also Read: கிரெடிட் கார்டை இப்படிப் படுத்தினால் பிரச்னையே இல்லை! - பணம் பண்ணலாம் வாங்க - 42

இது இந்த வருடத்தின் அதிகபட்ச கிரெடிட் கார்டு பரிவர்த்தனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அக்டோபரில் மட்டும் கிரெடிட் கார்டு மூலம் நடந்த பரிவர்த்தனைகள் 56% அதிகரித்துள்ளன. 2020-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் மொத்த பரிவர்த்தனை ரூ.64,891.6 கோடியாக இருந்தது.

இந்த வருடம் அக்டோபரில் தீபாவளிப் பண்டிகை வந்ததே அதிகளவில் பரிவர்த்தனை நடந்திருக்க காரணம் என்று கூறப்படுகிறது. இந்த வருடத்தின் இரண்டாவது அதிகப்படியான பரிவர்த்தனைகள் நடந்த மாதமாக கடந்த செப்டம்பர் மாதம் இருக்கிறது. கடந்த செப்டம்பரில் மட்டும் ரூ.80,477.18 கோடிக்கு பரிவர்த்தனைகள் நடந்திருக்கிறது.

Debit Card (Representational Image)

Also Read: கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் நீங்கள் செய்யக்கூடாத 7 தவறுகள் இவைதாம்!

கொரோனாவுக்குப் பிறகு கிரெடிட் கார்டு மூலமாக பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதும், கடந்த ஜூலைக்குப் பிறகு தொடர்ந்து பல பண்டிகைகள் வந்ததுமே இதற்கு முக்கியமான காரணம் என்கிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள்.



source https://www.vikatan.com/business/finance/rbi-says-credit-card-transaction-makes-a-record-on-october-crossing-1-trillion-rupees

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக