நவம்பர் 1ம் தேதி முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி!
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இன்று முதல்வர் தலைமையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து தற்போது தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், தமிழகத்தில் தளர்வுக்ளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து வகை கடைகள், மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுவதாகவும், வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனித்து இயங்கும் அனைத்து வகை பார்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8-வது வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு மாநகரப் பேருந்தில் திடீரென ஏறி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
இன்று தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் நடைபெற்றுவரும் சிறப்பு முகாமைப் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், திரும்பிச் செல்லும்போது, திடீரென சென்னை மாநகரப் பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார். அப்போது பேருந்தில் பயணம் செய்த மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். திடீரென முதல்வர் ஏறியதால் பயணிகள் ஆச்சர்யம் அடைந்தனர்.
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி பொறுப்பேற்ற பின்பு முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்துப் பேசுகிறார். தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரம், ஏழு பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் ஆளுநரிடம் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி இன்று சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-23-10-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக