``ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைத்துக்கொண்டவர்களும், வலிப்பு நோய் உள்ளவர்களும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?"
- ரியாஸ் கான் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.
``ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் இதயத்தில் ஸ்டென்ட் வைத்திருந்தாலோ, பைபாஸ் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தாலோ, இதய வால்வுகளில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தாலோ... இன்னும் இப்படி எந்த மாதிரியான இதயநோய் சிகிச்சை செய்துகொண்டவர்களும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் உங்கள் இதயநோய் மருத்துவர் பரிந்துரைத்த எந்த மருந்தையும் நிறுத்தாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.
Also Read: Doctor Vikatan: இரவில் சீக்கிரம் சாப்பிட்டால் ஈஸியாக எடை குறையுமா?
குழந்தைகள், பெரியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் ஃபிட்ஸ் எனப்படும் வலிப்பு பாதிப்பு வரலாம். மூளையில் கட்டிகள் இருந்தாலும் ஃபிட்ஸ் வரலாம். வலிப்பு பாதிப்பு உள்ளவர்கள் அதற்கான மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஒருவிதமான சிகிச்சை, பெரியவர்களுக்கு ஒருவிதமான சிகிச்சை என அது வயதுக்கேற்ப மாறுபடும். வலிப்பு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பவர்களும் 18 வயதுக்கு மேல் அவசியம் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வலிப்பு இருக்கும்போது கோவிட் தடுப்பூசி போடக்கூடாது. அதாவது, கடந்த ஒரு மாதத்தில் வலிப்பே வரவில்லை... மருந்துகளை எடுப்பதன் மூலம் அது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால் அவர்களும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/can-people-who-suffer-from-fits-take-covid-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக