பானிபூரி, பாவ் பாஜி, பேல்பூரி, சமோசா.... வழக்கமாகச் சாப்பிட்டு அலுத்துப் போன இந்த சாட் அயிட்டங்களுக்கு இந்த வாரம் லீவு கொடுங்கள். ஒரு மாறுதலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் பிரபலமான ஸ்னாக்ஸ் அயிட்டங்களை வீக் எண்டில் முயற்சி செய்து பாருங்கள். ஹேப்பி வீக் எண்ட் மக்களே...
தேவையானவை:
தட்டை - 12
கேரட் துருவல், பீட்ரூட் துருவல் கலவை - அரை கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எலுமிச்சைப்பழச் சாறு - அரை டீஸ்பூன்
காரச் சட்னி - 6 டீஸ்பூன்
புதினா சட்னி - 6 டீஸ்பூன்
மாங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன் (விரும்பினால்)
சாட் மசாலாத்தூள் - 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பாத்திரத்தில் கேரட் துருவலுடன் பீட்ரூட் துருவல், உப்பு, எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்துக் கலக்கவும். ஆறு தட்டைகளின் மீது காரச் சட்னி தடவி தட்டில் இடைவெளிவிட்டு வைக்கவும். அதன் மேலே கேரட் - பீட்ரூட் கலவையை வைக்கவும். பிறகு அதன் மீது வெங்காயம், கொத்தமல்லித்தழை, மாங்காய்த் துருவல், சாட் மசாலாத்தூள் தூவவும். மீதமுள்ள ஆறு தட்டைகளின் மீது புதினா சட்னி தடவி, காய்கறி கலவையின் மீது வைத்துப் பரிமாறவும்.
தேவையானவை:
மைதா மாவு - ஒரு கப்
தயிர் - கால் கப்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
ஒன்றிரண்டாகப் பொடித்த சீரகம் - கால் டீஸ்பூன்
சமையல் சோடா - ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
மைதா மாவுடன் தயிர், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், சீரகம், சமையல் சோடா, உப்பு சேர்த்துக் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை போண்டாக்களாக உருட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
தேவையானவை:
வெள்ளை அப்பம் செய்ய:
புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
காரச் சட்னி செய்ய:
பச்சை மிளகாய் - 20
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன்
புளி - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி வகைகளுடன் பருப்பைச் சேர்த்து நன்கு கழுவி, 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்துவிட்டு சீரகம், மிளகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக அரைத்தெடுக்கவும். பிறகு மாவை 6 மணி நேரம் புளிக்கவிடவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை போண்டாக்களாகப் போட்டுப் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு குறைந்தபட்சம் அரைமணி நேரம் ஊறவைத்த கடலைப்பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து வதக்கி இறக்கி ஆறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தெடுத்தால், காரச் சட்னி தயார். இதைச் சூடான வெள்ளை அப்பத்துடன் பரிமாறவும்.
தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப்
பச்சரிசி, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா கால் கப்
ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியுடன் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஜவ்வரிசியைத் தனியாக ஊறவைக்கவும். பிறகு அரிசி, பருப்புடன் காய்ந்த மிளகாய், ஜவ்வரிசி சேர்த்து கொரகொரவென அரைத்தெடுக்கவும். அதனுடன் பெருங்காயத்தூள், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவைச் சிறிய உருண்டைகளாக்கி மெல்லிய வடைகளாகத் தட்டிப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மொறுமொறுப்பாகg; பொரித்தெடுக்கவும்.
தேவையானவை:
தட்டை - 6
முறுக்கு - 4
கேரட் துருவல், பீட்ரூட் துருவல் கலவை - அரை கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - பாதியளவு (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எலுமிச்சைப்பழச் சாறு - அரை டீஸ்பூன்
காரச் சட்னி, புதினா சட்னி - தலா 6 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பாத்திரத்தில் தட்டை, முறுக்குகளைக் கைகளால் நொறுக்கிப் போடவும். அதனுடன் கேரட் துருவல், பீட்ரூட் துருவல், உப்பு, எலுமிச்சைப்பழச் சாறு, காரச் சட்னி, புதினா சட்னி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை, சாட் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
source https://www.vikatan.com/food/recipes/madurai-appam-theni-sweet-bun-salem-snacks-vadai-weekend-recipes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக