``என் வயது 27. சமீபத்தில்தான் ஜிம்முக்குப் போகத் தொடங்கியிருக்கிறேன். என் எடை 94 கிலோ. உயரம் 6.1. எனக்கு எடையையும் குறைக்க வேண்டும், அதே நேரம் மஸிலும் வேண்டும். அதற்கு நான் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். புரதச்சத்துக்காக தினமும் சிக்கன் சாப்பிடுவது சரியானதா?"
- மணிகண்டன், சேலம்.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.
``ஃபிட்னெஸ் பயணத்தில் உங்களை இணைத்துக்கொண்டதற்கு முதலில் வாழ்த்துகள். நீங்கள் சரியான நிபுணரின் வழிகாட்டுதலோடு உங்களுக்கான ஊட்டச்சத்து தேவைகளை அறிந்து அவற்றுக்கான உணவுகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய புரதச்சத்து, தரமான கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுச்சத்துகள் என எல்லாமே அவசியம். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். முதல்தர புரதச்சத்தைக் கொண்டுள்ள மீன், சிக்கன், முட்டை ஆகியவற்றுடன் சிறிது கார்போஹைட்ரேட்டும் உங்கள் உணவில் இடம்பெறட்டும். கீரைகள் மிக முக்கியம்.
Also Read: Covid Questions: எப்போதும் நாடித்துடிப்பு அதிகமாக இருக்கிறது; ஆபத்தானதா இது?
இப்போதுதான் ஜிம் வொர்க் அவுட்டுக்கு பழக ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பதால் அவசரம் வேண்டாம். உங்கள் இலக்கு நோக்கிய பயணத்தில் பொறுமையாகவே நகருங்கள். சரியான உணவுத்திட்டமானது உங்கள் லட்சியத்தை அடைய உதவும்.
உங்களுக்கான சரியான பயிற்சிகளை ஃபிட்னெஸ் ஆலோசகரின் மேற்பார்வையில் செய்யுங்கள். வாரத்துக்கு 4 நாள்கள் வொர்க் அவுட் போதுமானது. அதில் Strength Training பயிற்சிகளும் இருக்க வேண்டும். மெள்ளமெள்ள உங்கள் உடற்பயிற்சியின் வேகத்தை, நேரத்தை அதிகப்படுத்தலாம்.
Also Read: Doctor Vikatan: தடுப்பூசிக்குப் பிறகு உடல் பருமன் அதிகரித்தது போல் உணர்கிறேன்; ஏன்?
இவை தவிர...
- தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.
- பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்களை அறவே தவிருங்கள்.
- சர்க்கரை மற்றும் சர்க்கரை சேர்த்த அனைத்து உணவுகளையும் தவிருங்கள்.
- புரதத் தேவைக்காக ராஜ்மா, சன்னா, டோஃபு, பருப்பு, பனீர் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/how-to-lose-weight-without-losing-muscles
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக