Ad

திங்கள், 25 அக்டோபர், 2021

மாயமான ஸ்மார்ட் போன்; மாறி மாறிப் பேசிய கனகராஜ் சகோதரர்கள்; கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்!

கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் நெருங்கிவிட்டன. அ.தி.மு.க ஆட்சியில் முடித்து வைக்கப்பட்ட இந்த வழக்கு, தி.மு.க ஆட்சியில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதையடுத்து, யாரும் எதிர்பாராத விதமாக கனகராஜின் உடன் பிறந்த சகோதரர் தனபால் மற்றும் சித்தி மகன் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கனகராஜ்

Also Read: “மூன்று மணி நேரம் யாருக்காகக் காத்திருந்தார் கனகராஜ்?” - அதிரவைக்கும் கொடநாடு மர்மங்கள்...

கொடநாடு மர்மங்களைத் தேடி என்ற பகுதியில், இந்த வழக்கு சம்மந்தப்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஜூ.வி டீம் விசாரித்தது.

அதில், கனகராஜின் குடும்பத்தினர் மீது மனைவி கலைவாணி போலீஸில் சொல்லியிருந்த புகார் குறித்து ஜூ.வி இதழிலில் வெளியிட்டிருந்தோம். விபத்து நடந்தபோது கனகராஜிடம் இருந்து சாதாரண பட்டன் போன் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக கனகராஜின் சகோதரர்கள் கூறி வந்தனர். கனகராஜிடம் ஒரு ஸ்மார்ட் போன் இருக்கிறது.

ஸ்மார்ட் போன்

விபத்து நடந்த அன்றைய தினம் காலை வீட்டில் இருந்து புறப்பட்டபோதுகூட கனகராஜ் ஸ்மார்ட் போன் வைத்திருந்தார். விபத்துக்கு பிறகு அந்தப் போன் போலீஸாரிடமும் சிக்கவில்லை. கனகராஜின் மனைவியிடமும் செல்லவில்லை.

அந்த போனில் இருந்துதான், கனகராஜ் வி.வி.ஐ.பி ஒருவருடன் எடுத்த படத்தை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு அனுப்பியிருக்கிறார். இப்படி இந்த வழக்கு தொடர்பான பல ரகசியங்கள் அதில் இருக்கிறது. அந்த போன் குறித்து கனகராஜ் குடும்பத்துக்கு தெரிந்துள்ளதாகவும்,

Also Read: கொடநாடு மர்மங்களைத் தேடி | கனகராஜின் கடைசி நிமிடங்கள்; சாட்சிகளின் பகீர் தகவல்! |பகுதி -1

தனபால்

அதுகுறித்து கலைவாணி கேட்டபோது, 'அவனே போயிட்டான் உனக்கென்ன?' என்று மிரட்டியதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதுதொடர்பாக போலீஸார் தனபால் மற்றும் ரமேஷிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இவர்களுக்கு எதிராகத் திரட்டப்பட்ட ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் ஆத்தூரில் இருந்து இருவரையும் நீலகிரி மாவட்டம் சோலூர் மட்டம் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்த தனிப்படையினர், தனபால் மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் மீதும் சாட்சியங்களை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்லவிடாமல் தடுத்தல் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா, இருவரையும் வருகிற 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.



source https://www.vikatan.com/news/crime/kanagaraj-brothers-arrested-in-kodanad-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக