கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கோவை மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி இருக்கிறது. மோசமான சாலைகளால் விபத்துகள் நிகழ்கின்றன.
Also Read: விவசாயிகளுக்கு ஸ்மார்ட் போன் கொடுங்கள்... வானதி சீனிவாசன் கோரிக்கை!
சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும். அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். சட்டமன்றத்தில் ஏராளமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளேன். முதல்வரும், அமைச்சர்களும் ஏற்கெனவே பதில் அளித்துள்ளனர்.
அவற்றில் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளன. அதற்கு தமிழக அரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பாஜக சார்பில் கேரளாவுக்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளன. சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காமல் இருப்பதும் அதிமுகவின் முடிவு.
அதில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை. ஆளுநர் புதிதாக தமிழகம் வந்திருக்கிறார். அதன்காரணமாக, மாநில அரசிடம் திட்டங்களை தெரிந்து கொள்வதற்காக கோரிக்கை வைத்திருக்கிறார்.
தலைமை செயலாளர் அதற்கான கோப்புகளை தயார் செய்ய சொல்லியிருக்கிறார். தமிழகத்தில், அரசு திட்டங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தானே கேட்டிருக்கிறார்கள். இதில் எந்த தவறுமில்லை.
உரிமை மீறலோ, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான விஷயம் கிடையாது. இது வழக்கமாக நடப்பதுதான். ஆளுநரைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக இப்படி சொல்லிக் கொண்டிருக்கின்றன” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-mla-vanathi-srinivasan-speaks-about-governor-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக