சென்னை புளியந்தோப்பில் சர்ச்சைக்குள்ளான வகையில் குடிசை மாற்று வாரியம் கட்டடத்தை கட்டிய பி.எஸ்.டி கட்டுமான நிறுவன உரிமையாளர் தென்னரசு வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தென்னரசு, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் தங்கமணிக்கு வேண்டியவர் என்பதால், அடுத்த குறி தங்கமணியாக இருக்குமோ என்று நாமக்கல் மாவட்ட அ.தி.மு.கவுக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
Also Read: 'காற்றில் பறந்தது சமூகநீதி' ; அண்ணாமலை Vs அமைச்சர் கயல்விழி! -பரபரக்கும் அடுத்த ட்விட்டர் பஞ்சாயத்து
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பி.எஸ்.டி கட்டுமான நிறுவன உரிமையாளர் பி.எஸ்.தென்னரசு. இவர், பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கட்டடங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகள், குடிசை மாற்று வாரியக் கட்டட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவரது நிறுவனம்தான் சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரியம் கட்டடத்தை கட்டியிருக்கிறது. அதேபோல், பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரிகளையும் கட்டியிருக்கிறது. அதேபோல், ஆத்தூர், சென்னை, நாமக்கல் ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுப்பணித்துறை மூலம் கட்டடங்களையும் கட்டியிருக்கிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்நிறுவனத்திற்கு அதிகளவில் கட்டுமான ஒப்பந்தங்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவரது வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், நல்லூர் அடுத்த கோலாரத்தில் உள்ள இவரது இல்லத்திலும், நாமக்கல் அடுத்த நல்லிபாளையத்திலுள்ள அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.
Also Read: விஜயபாஸ்கர்: 16 மணி நேரம் நடந்த சோதனை; தப்பிய சில முக்கியத் `தலைகள்’ - ரெய்டு பின்னணி!
இந்தச் சோதனையில், ஒரு டி.எஸ்.பி, ஒரு ஆய்வாளர் மற்றும் 5 போலீஸார் ஈடுப்பட்டனர். இந்தக் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரான தென்னரசுவை நேரில் வரவழைத்த அதிகாரிகள், அவரிடம் வங்கி கணக்குகள், நாமக்கல், ஆத்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அரசு கட்டுமான பணியின்போது பயன்படுத்தப்பட்ட கோப்புகளை சரிபார்த்ததாக சொல்லப்படுகிறது. நேற்று இரவு 11 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையில், சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், "இந்த நிறுவனத்தை நடத்தி வரும் தென்னரசு, முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான தங்கமணிக்கு நெருக்கமானவர். அதனால், தென்னரசு சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியிருப்பது, தங்கமணி தரப்பை ஆடிப்போக வைத்திருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த குறி, தங்கமணியாகத்தான் இருக்கும்னு நாமக்கல் மாவட்டத்தில் பேச்சாக இருக்கிறது" என்று அ.தி.மு.கவினர் சொல்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/politics/article-about-raid-at-namakkal-pst-construction
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக