Ad

வெள்ளி, 14 மே, 2021

டவ்-தே: அரபிக்கடலில் புயலாக தீவிரமடைகிறது! - தமிழகம், கேரளாவில் கனமழை அலர்ட்

தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், டவ்-தே புயலாக வலுவடைந்துள்ளது. இது மே மாதம் 18- ம் தேதி காலைக்குள் குஜராத் கடற்கரையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

புயல் காரணமாக லட்சத்தீவுகள், கேரளா, தமிழகம், கர்நாடகம், கோவா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மாவட்டங்களில் டவ்-தே புயல் சின்னம் காரணமாக ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதே போன்று கேரளாவில் கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் திருவனந்தபுரம், பாலக்காடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை டவ்-தே புயல் காரணமாக தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, நீலகிரி மாவட்டங்களில் காற்றுடன் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை பெய்து வருவது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/general-news/cyclone-tauktae-intensifies-into-cyclonic-storm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக