`2-டிஜி கொரோனா தடுப்பு மருந்து!’ -இன்று முதல் விநியோகம்!
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ)-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) கொரோனா தடுப்பு மருந்து தயாரித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி டிஆர்டிஓ தயாரித்த 2-டிஜி மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கும் என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் இந்த மருந்து இன்று வெளியாகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இதனை வெளியிடுகின்றனர். முதலில் 10 ஆயிரம் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் 2டிஜி கொரோனா தடுப்பு மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம். இதன் மூலம் ஆக்ஸிஜன் உதவியோடு இருக்கும் கொரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும் என்கிறார்கள் மருத்துவத்துறை சார்ந்த சிலர்.
source https://www.vikatan.com/news/general-news/17-05-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக