Ad

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

"சிம்புவுக்கு மாஸா ஒரு டைட்டில்; கிராமத்துக் கதை ரெடி; `நடுநிசி நாய்கள்' ஏன் புரியலை?!"- கௌதம் மேனன்

'நீ தானே என் பொன்வசந்தம்' படத்துக்காக இளையராஜாவை சந்திச்ச அனுபவம்..?

''ஸ்கூல், காலேஜ் வாழ்க்கையில் ராஜா சாருடைய மியூசிக் இல்லாமல் இருந்ததில்ல. அவரோட படங்களின் பிஜிஎம்கூட மனசுல இருக்கும். இந்தப் படத்துக்காக போனப்போ, 'என்கூட படம் பண்ணுவீங்களானு தெரியலை’னு சொல்லிதான் ஆரம்பிச்சேன். கதை சொன்ன அடுத்த நாளே கம்போஸிங் போயிட்டோம். ராஜா சார் எப்படி ஒரு பாட்டை புரொடியூஸ் பண்றார்னு லைவ்வா ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன். லண்டனுக்கு போனப்போ 80 பீஸ் ஆர்கெஸ்ட்ராவை அஞ்சு நாள் வரைக்கும் வெச்சிருந்து ஒவ்வொரு பாடலுக்கும் மியூசிக் நோட்ஸை பேப்பரில் எழுதி கொடுத்துட்டார். டேக்னு சொன்னவுடனே ஆர்கெஸ்ட்ரா ஆள்கள் வாசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்கேயாவது தப்பாயிருந்த சார் சொல்லுவார். உடனே, திரும்பவும் முழு பாட்டையும் முதல்ல இருந்து வாசிக்க ஆரம்பிச்சிருவாங்க. அங்கே இருந்தவங்களுக்கு இளையராஜா சார் பற்றி எதுவும் தெரியாது. ஆனா, அவர் மியூசிக் நோட்ஸ் கொடுத்த விதமும் பாட்டு வாங்குனதையும் பார்த்துட்டு எல்லாரும் ரெக்கார்ட்டிங் முடிச்சதுக்கு பிறகு எந்திருச்சு நின்னு கைதட்டுனாங்க. இதெல்லாம் பெரிய பாடமா இருந்தது. இன்னும் மியூசிக் பத்தி தெரிஞ்சிக்க உதவியா இருந்தது. நிறைய மியூசிக் நோட்ஸ் படிக்க ஆரம்பிச்சேன். காலேஜூக்கு அப்புறம் கிதார் மற்றும் பியானோலாம் எடுத்து வாசிச்சேன்.''

கௌதம் மேனன்

'நடுநிசி நாய்கள்’ படத்தை மியூசிக் இல்லாம எடுக்கணும்னு ஏன் தோணுச்சு?

”மியூசிக்னாலதான் கெளதம்னு சொல்ற கமெண்ட்ஸை உடைக்குறதுக்காக பண்ணலை. ஏன்னா, இந்தப் படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதுறப்போ மியூசிக் சவுண்ட் எதுவும் எனக்கு கேட்கல. 'ஹேராம்' படத்துல வர ' நீ பார்த்த பார்வைக்கு' பாட்டை லுப்ல போட்டுத்தான் 'வாரணம் ஆயிரம்' ஸ்க்ரிப்ட் எழுதுனேன். எழுதுறப்போ எப்போவும் ரிதம் தேவைப்படும். அது 'நடுநிசி நாய்கள்'க்கு தேவைப்படல. அதனால ஒரு மியூசிக் கருவியோட இசைக்கூட இருக்க கூடாதுனு முடிவு பண்ணுனேன். எல்லாருமே, 'எப்படி இது சாத்தியம்'னு கேட்டாங்க. 'சவுண்ட் எஃபெக்ட்ஸ் வெச்சிட்டு ஃபீல் கொடுக்கலாம்'னு சொன்னேன். பத்து வருஷத்துக்குப் பிறகு ரிலீஸாகியிருக்க வேண்டிய படத்தை அப்போவே கொடுத்துட்டேன்னு நினைக்குறேன். அதுமட்டுமில்லாம, 'இவர் எதுக்கு இப்படியொரு படம் பண்ணுனார்’னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னோட பெரிய பலமே பலவீனமாகிருச்சு. ஏன்னா, பெண்களை மதிப்பா காட்டுறவன் இதுல காட்டியிருந்த விதம் பலருக்கு ஆச்சர்யத்தை கொடுத்திருச்சு. பெரிய ஓப்பனிங் படத்துக்கு இருந்தது. ஆனா, முதல் ஷோ போகும்போதே பலரும் தெறிச்சு ஓடிட்டாங்க. சில அமைப்புகள் வீட்டுக்கு முன்னாடி நின்னு போராட்டலாம் பண்ணுனாங்க. அவங்க எல்லாரையும் கூப்பிட்டு, 'உங்களுக்கு என்ன பிரச்னை’னு பேசுனேன். ’படத்தை பாருங்க’னு டிஸ்கஷன் பண்ணுனேன். கான்செப்ட் இவங்களுக்குப் புரியலனு புரிஞ்சிக்கிட்டேன். எல்லாத்துக்கு மேல அது ஒரு படம். நல்ல விஷயத்தை காட்டுறப்போ அதை எடுத்துக்கிட்டு போறதுமில்ல. அப்பறம் ஏன் கெட்ட விஷயம்னு அவங்களுக்கு தோணும்போது பெருசா எடுத்துக்குறாங்கனு தெரியலை. இந்தப் படத்துக்கு மியூசிக் தேவைப்பட்டிருந்தால் வெச்சிருந்திருப்பேன்.''

கௌதம் மேனன்

உங்கப் படத்தோட நெகட்டிவ் கேரக்டர் டிசைன் பண்றதுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக்குறீங்க?

"நெகட்டிவ் கேரக்டர் டிசைன் பண்றதுக்கு பெருசா எனக்கு டைம் எடுக்குறதேயில்ல. ஈஸியா வந்திடுதுனு சொல்லலாம். தவிர, என் படத்தோட ஹீரோக்கள் இதை சரியா புரிஞ்சிக்கிட்டு நல்ல சப்போர்ட்டா இருந்திருக்காங்க. 'காக்க காக்க' படம் பொருத்தவரைக்கும் பாண்டியா கேரக்டருடைய வடிவத்தை, சூர்யா சரியா புரிஞ்சிருந்தார். அதே மாதிரிதான் 'என்னை அறிந்தால்' படத்துல விக்டர் கேரக்டரையும் அஜித் சார் நல்லா புரிஞ்சிக்கிட்டார். இந்த கேரக்டர் யார் பண்ணுனா நல்லாயிருக்கும்னு டிஸ்கஷன் போனபோது, அருண்விஜய்யை தனியா ஷூட் பண்ணி லேப்டாப்ல அஜித் சார்கிட்ட காட்டுனேன். பார்த்தவுடனே, அருண்தான் விக்டர்னு சொன்னார். எதை எப்படி பண்ண போறோம்னு இவர்கிட்ட சொல்லிட்டே இருந்தேன். இந்தளவுக்கு டீம் ஸ்ட்ராங்கா இருந்தால்தான் படமும் ஸ்ட்ராங்கா இருக்கும். இப்போ வெளியான 'மாஸ்டர்' படமும் இதே ஜோன்ல இருந்தது இல்லயா?!''

உங்களுடைய படங்களில் ஆங்கில வசனங்கள் அதிகமா இருந்தாலும் படத்துகான தமிழ் பெயர் வைக்குறதுக்கு எவ்வளவு மெனக்கெடல் இருக்கும்?

''ஒரு பாட்டுகான ட்யூன் வாங்க போறப்போ எப்படிப்பட்ட மியூசிக் கிட்டார்ல இருந்து வரபோதுனு தெரியாது. சொல்லப்போனா, இதுவரைக்கும் நான் வேலைப் பார்த்த மியூசிக் டைரக்டர்ஸ் எல்லார்கிட்ட இருந்தும் வர்ற முதல் ட்யூனை ஓகே பண்ணி டப்புனு பிடிச்சு வெச்சிடுவேன். 'இந்த ட்யூன்லயே கனெக்ட் ஆகிட்டேன், இதுவே போதும்'னு சொல்லியிருக்கேன். 'இல்ல, வரிகள் எழுத கஷ்டமா இருக்கும்'னு மியூசிக் டைரக்டர்ஸ் சொல்லுவாங்க. 'பிரச்னையில்ல, தாமரை எழுதிருவாங்கனு' சொல்லிடுவேன். ரொம்ப நேச்சுரலா வேலைப் பார்ப்போம். இதே மாதிரிதான் படத்தோட டைட்டிலும். இதுக்காக தனியா ரூம் போட்டு யோசிச்சதே கிடையாது. ஸ்க்ரிப்ட் எழுதிட்டு இருக்குறப்போவே தோணும். அப்படியில்லைனா பைக் அல்லது கார்ல போயிட்டு இருக்குறப்போ தோணும். தோணுனதை டக்குனு எடுத்து வெச்சிடுவேன். சில தமிழ் வார்த்தைகளுக்கு டவுட் வந்துச்சுனா மதன் கார்க்கி அல்லது தாமரைக்கு போன் பண்ணி கேட்டுக்குவேன். 'என்னை அறிந்தால்' படத்துகான டைட்டில் கிடைக்கதான் டைம் எடுத்துச்சு. படத்தோட க்ளைமாக்ஸ் சீக்வென்ஸ் ஷூட்டிங் வரைக்கும் டைட்டில் கிடைக்கலை. அப்போ ஒரு இடத்துல நான் உட்கார்ந்திருந்தப்போ, 'உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்'னு பாட்டு ஓடிக்கிட்டு இருந்தது. இதுல இருந்து தோணுனதுதான் 'என்னை அறிந்தால்' டைட்டில். உடனே, அஜித் சார்கிட்ட சொன்னேன். இவருக்கும் பிடிச்சிருந்தது. ஆனா, படத்தோட புரொடியூசர் ரத்னம் சாருக்கு 'சத்தியதேவ் ஐ.பி.எஸ்' மாதிரி கமர்ஷியல் டைட்டில் வெச்சிருக்கலாம்னு சொன்னார். இருந்தும், 'என்னை அறிந்தால்' டைட்டிலையே ஓகே பண்ணிட்டோம்''

என்னை அறிந்தால்

உங்க இயக்கத்துல சிம்பு நடிக்கிற படத்துகான டைட்டிலை முடிவு பண்ணீட்டீங்களா?

''ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டேன். வொர்க் டைட்டிலா ஆங்கிலத்துல ஒண்ணு வெச்சிருந்தேன். இதை சிம்புக்கிட்ட சொன்னபோது, இதுவரைக்கும் நம்ம படங்கள்ல இங்கிலீஷ் டைட்டில் வெச்சதில்லை. அதனால, அதை உடைக்க வேண்டாம்னு சொல்லிட்டார். எனக்கும் சரினு பட்டது. ஆனா, இந்த இங்கிலீஷ் டைட்டில் வெச்சிருந்தா எல்லோரும் எதிர்பார்க்கிற மாதிரி மாஸா இருந்திருக்கும். ஆனா, படம் மாஸ் படமில்லை."

Also Read: "`மின்னலே' கதையை மாதவன் மாத்திட்டார்!" - கௌதம் மேனன்

படங்கள் மற்றும் உங்க லைப் ஸ்டைல்ல ஏதாவது சென்ட்டிமென்ட் இருக்கா?

"அப்படி எதுவுமில்லை. செவ்வாய் கிழமை ஷூட்டிங் தொடங்கக்கூடாதுனு சொன்னா, அன்னைக்குதான் ஷூட்டிங் ஆரம்பிப்பேன். பெருசா எனக்கு இதிலெல்லாம் உடன்பாடு இருந்ததில்லை."

கௌதம் மேனன் - சிம்பு

கெளதம் மேனனுடைய வழக்கமான ஸ்டைல் இல்லாமல் கிராமத்து கதையை கையில எடுக்கணும்னு நினைச்சது உண்டா?

"நிச்சயமா நினைச்சிருக்கேன். இப்போ அதுக்கான வேலைகள்தான் போயிட்டிருக்கு. என்னோட அடுத்த பத்து வருட சினிமா வாழ்க்கையில வேற மாதிரியான கேரக்டர்களை டீல் பண்ணனும்னு முடிவு பண்ணியிருக்கேன். 'பாவக்கதைகள்' ஷூட்டிங்கின்போதே அங்கிருந்த நிறைய விஷயங்களை சேகரிச்சேன். என் டீம்கிட்ட டிஸ்கஸ் பண்ணுனேன். இருந்தும், எழுத்து வடிவத்துக்கு மாற்ற சிலருடைய சப்போர்ட் தேவைப்படும்னு தோணுது. அதுக்காகவும் சிலர்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்."

Also Read: ``ரஜினிக்காக கதைகள் வச்சிருக்கேன்!'' - ‘`விஜய் படத்துக்காக ரெடியா இருக்கேன்!’’

உங்களுடைய தோற்றம், உடைகள் எல்லாம் ராஜீவ் மேனன் மாதிரியே ஸ்டைலா இருக்கே! அவர்கிட்ட இருந்துதான் இதையெல்லாம் ஃபாலோ பண்றீங்களா?

"ராஜீவ் சார்கிட்ட இருந்து இந்த விஷயங்கள்ல இன்ஃப்ளூவன்ஸ் ஆகல. இவர்கிட்ட வேலை பார்க்குறதுக்கு முன்னாடி பொதுவா யார்கிட்டயும் பேசமாட்டேன். ரொம்ப அமைதியா இருப்பேன். அவ்வளவுதான். சொல்லப்போனா, என்னோட பர்ஸ்ட் கேர்ள் ப்ரெண்ட் என்னைவிட்டு போனதுக்கு நான் அப்படி இருந்ததுதான் காரணம். இந்த மாதிரியான தாழ்வு மனப்பான்மை எனக்குள்ள நிறைய இருந்தது. ஆனா, ராஜீவ் சார்கிட்ட வேலைப் பார்க்குறப்போதான் அது உடைஞ்சது. ஏன்னா, ஒரு ஆர்டிஸ்ட்கிட்ட போய் எதுவும் பேசாமல் நம்ம நினைச்சதை வாங்க முடியாது. இதை ராஜீவ் சார்கிட்டதான் கத்துக்கிட்டேன். ஏன்னா, பிரபுதேவாவுக்கு டான்ஸ் ஸ்டெப் இப்படியிருக்கணும்னு ஆடிகாட்டி சொல்லிகாட்டுவார். 'வெண்ணிலவே' பாட்டுலாம் ராஜீவ் சாருடைய டிசைன் தான். 'என்னடா இவர் அவர்கிட்ட இப்படி பண்ணிட்டு இருக்கார்'னு எனக்குள்ள தோணும். 'கஜோல் என்ன பண்றீங்கனு' திட்டுவார். அப்போதான், இந்த தாழ்வுமனப்பான்மையை உடைக்கணும்னு தோணுச்சு. அப்போ, ஒரு மியூசிக் வீடியோ டைரக்‌ஷன் பண்ற வாய்ப்பு கிடைச்சது. என்னோட ப்ரெண்ட்தான் டைரக்ஷன் பண்ணுனான். நான் ஸ்க்ரிப்ட் எழுதி கொடுத்தேன். மலேசியன் சிங்கர் தபிதாவை வெச்சு ஷூட்டிங் நடக்குது. வரிகளுக்கு ஏத்த மாதிரி கேமரா டிராக் மூவ் ஆகணும். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல ஷாட் சொல்லி கட் சொல்ல ப்ரெண்ட்னால முடியல. எல்லாரும் ஒவ்வொருத்தவங்க முகத்தை பார்த்துட்டு இருக்காங்க. ஒரு மணிநேரம் எதுவும் சரியா நடக்காமல் இப்படியே போயிட்டு இருந்தது. அப்போ, 'ஹே மச்சான் நான் பண்ணவானு' கேட்டேன். 'ப்ளீஸ் மச்சான், எப்படி பண்ணனு புரியலனு' சொன்னான். உடனே, மைக் கையில வாங்கி ராஜீவ் சார் எப்படி வேலை வாங்குவார்னு மைண்ட்ல கொண்டு வந்து டைரக்‌ஷன் பண்ணினேன். ராஜீவ் சார்னாலதான் என்னால அதை பண்ண முடிஞ்சது. ஷூட்டிங் ஸ்பாட்ல டான்ஸ் ஸ்டெப், பைட்ல நான்தான் பண்ணி காட்டுவேன்."

ராஜீவ் மேனன்

'நவரசா' அப்டேட்?

"மணிரத்னம் சார் மற்றும் ஜெயந்திராவுடைய ஐடியா இது. இந்தப் படத்தின் மூலமா வர பணத்தை சினிமா துறையில இருக்குறவங்களுக்கு கொடுக்கணும்னு பண்ணிட்டு இருக்காங்க. ஏன்னா, லாக்டெளன்ல நிறைய பேருக்கு வேலையில்லை. இதனால, இதுல வேலைப் பார்க்குற எல்லோருமே சம்பளம் வாங்காமல் வேலை செய்றோம். நான் எழுதின ஸ்கிரிப்ட்ல சூர்யா நடிச்சா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. சூர்யாவுக்கு மெசேஜ் ஆனுப்பினேன். 'ஸ்க்ரிப்ட் அனுப்புங்க'னார். படிச்சு பார்த்துட்டு, 'ஷூட்டிங் எப்போயிருக்கும்னு'னு கேட்டார். கோவிட் காலத்துலயும் ரொம்ப செக்யூரா ஷூட்டிங் பண்ணுனோம். பி.சி.சார் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். நிறைய டிஸ்கஷன்ஸ் சூர்யாவுக்கும் எனக்குமிடையே நடந்தது. அந்த ஆறு நாள்கள் மேஜிக் மாதிரியிருந்தது."



source https://cinema.vikatan.com/tamil-cinema/director-gautham-menon-talks-about-simbu-movie-and-other-memories-from-his-career

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக