Ad

வியாழன், 25 பிப்ரவரி, 2021

`தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்!' - நீட் தேர்வு கட்டண உயர்வுக்கு வலுக்கும் கண்டனம்

கடந்த ஆண்டு நீட் முதுகலை பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு கட்டணம், பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 3,750 ரூபாயாகவும் எஸ்.சி/ எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2,750 ரூபாயாகவும் இருந்தது. இந்தாண்டு நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காண கால அவகாசம் நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிர்ச்சியடையும் வகையில் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நீங்க NEET தேர்வுக்குத் தயாரா இருக்கீங்களா?

பொது மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேர்வுக் கட்டணம்  4,250 ரூபாயுடன் ஜி.எஸ்.டி 765 ரூபாய் என மொத்தம் 5,015 ரூபாயாகவும் எஸ்.சி/ எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் 3,250 ரூபாயுடன் அதற்கான ஜி.எஸ்.டியாக 585 ரூபாயுடன் மொத்தம் 3,835 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே நீட் தேர்வு நடத்துவற்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் தற்போது தேர்வுக் கட்டண உயர்வு மாணவர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. இது குறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

ரவீந்திரநாத்

"தேசிய கல்வி ஆணையத்தின் இந்த அறிவிப்பு கடும் கண்டனத்துக்குரியது. ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த நுழைவுத்தேர்வை எழுதுகின்றனர். இதுபோன்ற கட்டண உயர்வின் காரணமாகத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும். பொதுவாக, மருத்துவ மேற்படிப்புக்கான இந்த நுழைவுத்தேர்வை இறுதி ஆண்டு மாணவர்கள் மட்டுமல்லாமல் ஏற்கெனவே படித்து முடித்து பணியில் இல்லாத எம்.பி.பி.எஸ் மாணவர்களும் எழுதுவர். இந்தத் தேர்வு கட்டண உயர்வு, அவ்வாறான மாணவர்களுக்குத் தேவையற்ற மன உளைச்சலைக் கொடுக்கும்" என்று கூறினார்.



source https://www.vikatan.com/news/education/activists-condemn-neet-pg-entrance-exam-fee-hike

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக