கோவை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகின்றன. குளக்கரைகளை அழகுப்படுத்துவது, வாக்கிங் பாதை, சைக்கிள் பாதை, மாதிரி சாலை போன்ற அந்தப் பணிகளுக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தன. இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் திறப்பு விழா கோவையில் இன்று நடைபெறுவதாக இருந்தது.
Also Read: `நோட்டீஸ் கொடுக்காமல் எப்படி இவ்வளவு பெரிய தூண்கள்?' - கோவை மேம்பாலம் விவகாரத்தில் நீதிமன்றம் ஷாக்
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் சிட்டியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் கடந்த சில நாள்களாக வழங்கப்பட்டு வந்தன.
ஆனால், திடீரென்று நேற்று மாலை சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. இதையடுத்து, இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் அவசர அவசரமாக அதிகாரிகளை வைத்து திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டது. வெள்ளிக்கிழமை மதியம் திறப்பு விழா நடந்தது.
இதற்காக, ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பில், “மாண்புமிகு நகாராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் திறந்து வைக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உக்கடம் பெரியகுளம் பகுதியில் போடப்பட்டிருந்த பெரிய மேடையில் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் ஏற மறுத்துவிட்டார். அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட பேனரில் அமைச்சர் வேலுமணியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்வெட்டை நேரில் வைக்கவில்லை.
அதற்கு பதிலாக குமாரவேல் பாண்டியன் காணொளி காட்சி வழியாக திறந்ததும், திரையில் ஒரு கல்வெட்டு தெரிந்தது. அந்த கல்வெட்டிலும், “அமைச்சர் வேலுமணி அவர்களின் உத்தரவின் பேரில், ஆணையர் குமாரவேல் பாண்டியன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இடைவெளியில், கோவை மாநகராட்சி பட்ஜெட்டும் அறிவிக்கப்பட்டது விட்டது. மேலும், சட்டசபை தேர்தல் நெருங்குவதால், ஜெயலவிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-கள் தொகுதி வாரியாக வீடு வீடாக சென்று பரிசு பொருள்களை வழங்கி வருகின்றனர்.
நேற்று மாலை தேர்தல் அறிவிப்பு வந்தப் பிறகும் கூட, இரவு வரை பரிசு பொருள்கள் தடையில்லாமல், கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு டெலிவரி செய்யப்பட்டதாம்!
source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-smart-city-open-function-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக