Ad

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

தோனி, சென்னை சூப்பர் கிங்ஸின் பிராண்ட் வேல்யூ குறைகிறதா... சிஎஸ்கேவின் புதிய ஸ்பான்சர் யார்?! #CSK

2021 ஐபிஎல் போட்டிகளுக்குத் தீவிரமாகத் தயாராகிவருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸின் டைட்டில் ஸ்பான்சராக இருந்த முத்தூட் நிறுவனத்துக்கு பதில் இந்த ஆண்டு புதிய ஸ்பான்சரைத் தேடிக்கொண்டிருக்கிறது சிஎஸ்கே.

2008 ஐபிஎல் தொடங்கப்பட்டபோது சென்னை சூப்பர் கிங்ஸின் டைட்டில் ஸ்பான்சராக ஏர்செல் நிறுவனம் இருந்தது. அதன்பிறகு அந்த இடத்தை கேரளாவின் முத்தூட் ஃபினான்ஸ் நிறுவனம் பிடித்தது. இந்நிலையில்தான் 2021-ம் ஆண்டுக்கான ஸ்பான்சர்ஷிப் டீல்களை சிஎஸ்கே நிர்வாகம் இறுதிசெய்த தொகைக்கு, முத்தூட் நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

டைட்டில் ஸ்பான்சராக இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 25 கோடி ரூபாய் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. இதற்கு முத்தூட் நிறுவனம் மறுக்க ஃபோக்ஸ்வேகன் கார் குழுமத்தின் ஓர் அங்கமான ஸ்கோடா கார் நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக இறுதிசெய்யப்படலாம் எனப் பேசப்பட்டது. இப்போது ஸ்கோடாவும் பின்வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.

தோனி

இறுதியாக ஃபிளிப்கார்ட்டின் ஃபேஷன் ஆன்லைன் தளமான MYNTRA சென்னை சூப்பர் கிங்ஸின் ஸ்பான்சராக இறுதிசெய்யப்படலாம் என்கிற செய்திகள் கசிந்திருக்கின்றன.

கடந்த சீசனில் சென்னை அணி சந்தித்த தொடர் தோல்விகளாலும், தோனி இந்த சீசனோடு ஓய்வுபெறலாம் என்கிற சூழலாலும் சென்னை சூப்பர் கிங்ஸின் பிராண்ட் வேல்யூ குறைந்திருக்கிறது. தோனிக்கு மாற்றாக சென்னை சூப்பர் கிங்ஸுக்குள் வரப்போகும் புதிய தலைவனை வைத்தே அதன் பிராண்ட் வேல்யூ ஏறும் என்கிறார்கள். அதற்கு முன் கடந்த ஆண்டு சிஎஸ்கே சந்தித்த தோல்வியை இந்தாண்டு சரிசெய்தாகவேண்டும்.



source https://sports.vikatan.com/ipl/new-title-sponsor-for-chennai-super-kings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக