Ad

வியாழன், 25 பிப்ரவரி, 2021

`விவசாயிகளின் நகைக் கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி! - பழனிசாமியின் அதிரடி அறிவிப்புகள் #NowAtVikatan

விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி!

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இன்று மாலை சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், ``கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் நகை வரை வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக” அறிவித்தார். மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இன்றைய கூட்டத்தொடரில் மேலும் சில அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு..!

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் குழு தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அண்மையில் தனது ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்தியது. தொடர்ந்து டெல்லி திரும்பிய தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, தேர்தல் தேதிகளை இறுதி செய்யும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.

இந்தியத் தேர்தல் ஆணையம்

இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். இதன்காரணமாக இன்று மாலை 4.30 மணிக்கு 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!



source https://www.vikatan.com/news/general-news/26-02-2021-just-in-live-updates-and-tn-assembly-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக