அ.தி.மு.க பா.ஜ.க பேச்சுவார்த்தை...!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க - பா.ஜா.க இடையே ஆன தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என கூறப்படும் நிலையில், தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர்கள், அ.தி.மு.க-வுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவாரத்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர்கள் சி.டி ரவி, கிஷன் ரெட்டி ஆகியோர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர் செல்வம் இல்லத்திலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க பா.ஜக இடையே தொகுதி பங்கீட்டில் இன்று சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
source https://www.vikatan.com/news/general-news/tamilnadu-election-2021-and-other-current-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக