Ad

வியாழன், 4 பிப்ரவரி, 2021

''என்னை ஏன் மொட்டை அடிக்கச் சொன்னார் மிஷ்கின்?!''- லட்சுமி ராமகிருஷ்ணன்

'' 'யுத்தம் செய்' படத்துல என்னோட கேரக்டருக்கு முதல்ல நதியாகிட்டதான் மிஷ்கின் சார் பேசியிருக்கார். ஆனா, சில காரணங்களால் நதியாவால பண்ண முடியல. அப்போ மிஷ்கினுக்கு என்னுடைய ஞாபகம் வந்திருக்கு. அன்னபூரணி கேரக்டருக்கு சரியாயிருப்பேன்னு தோணியிருக்கு. இதை அவருடைய உதவி இயக்குநர்கள்கிட்ட சொல்லியிருக்கார். அப்போ, எல்லாருமே இந்த கேரக்டருக்கு லட்சுமி சரியாயிருக்க மாட்டாங்கனு சொல்லியிருக்காங்க. 'யார்லாம் நதியாவுக்கு ஓட்டு போடுறீங்கனு' மிஷ்கின் கேட்க மொத்த யூனிட்டும் நதியாவுக்கு ஓட்டு போட மிஷ்கின் மட்டுமே எனக்கு ஓட்டு போட்டிருக்கார். இப்படித்தான் இந்தப் படத்துக்குள்ள நான் என்ட்ரி ஆனேன். இந்தப் படத்துல நான் நடிக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் மிஷ்கின் படங்கள் எதுவும் நான் பார்த்தில்ல. சொல்லப்போனா, 'சிவா மனசுல சக்தி' படத்தோட ப்ரிவியூ ஷோவின்போது கண்ணாடி போட்டுகிட்டு எனக்கு முன்னாடி சீட்ல உட்கார்ந்து படம் பார்த்துட்டு இருந்தார் மிஷ்கின் . அப்போ, 'இவர் யார்னு' பக்கத்துல இருந்தவங்கிட்ட கேட்டேன். டைரக்டர்னு சொன்னாங்க. மிஷ்கின் பக்கத்துல போயிட்டு 'கூலிங் கிளாஸ் போட்டுட்டு எப்படி படம் பார்க்க முடியும்னு' கேட்டுட்டு வந்துட்டேன். 'யார் இந்த அம்மானு' என்னைப் பத்தி விசாரிச்சு இருக்கார் மிஷ்கின்.

அப்புறம் 'யுத்தம் செய்' படத்துல வர்ற ரிப்போட்டர் கேரக்டருக்காக என்னை அவருடைய ஆபிஸூக்கு கூப்பிட்டு இருந்தார். அப்போதான் அவரோட நீண்ட நேரம் பேசுற வாய்ப்பு கிடைச்சது. நிறைய புத்தங்கள் பற்றியெல்லாம் பேசிட்டு இருந்தோம். படத்தோட கதையை என்கிட்ட மிஷ்கின் சார் சொன்ன விதமே ரொம்ப விறுவிறுப்பா இருந்தது. முழு கதையும் சொன்னார். படத்தோட ஷூட்டிங் முழுக்க சென்னையில்தான் நடந்தது. அதே மாதிரி இரவு நேர ஷூட்டிங்தான் அதிகம். இந்தப் படம் பொருத்தவரைக்கும் எங்க வீட்டுல இருக்குறவங்களுக்கு எல்லாமே புதுசா இருந்தது. படத்துல என்னோட கேரக்டருக்காக மொட்டை போட்டு நடிச்சேன். வித்தியாசமான கேரக்டருக்காக நம்ம முடியை இழக்குறதுல தப்பில்லைன்னு யோசிச்சு மொட்டை அடிச்சேன்.

'யுத்தம் செய்


எங்க வீட்டுல முடியை வெட்டுறதுக்குகூட ஒத்துக்க மாட்டாங்க. இப்படியிருந்த சூழல்ல மொட்டை அடிச்சிட்டு வந்து நின்னேன். என்னோட மகள் விசில் அடிச்சி சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள். கணவர் என்ன சொல்ல போறார்னு தயக்கத்தோட வீட்டுக்கு போனேன். வீட்டு கதவை திறந்தவர் என்னைப் பார்த்துட்டு கூலா, 'இந்த கெட்டப்கூட நல்லாதான் இருக்கு'னார். மத்தப்படி மொட்டை அடிச்ச சம்பவத்தை பற்றி வெளியே யார்கிட்டயும் நான் சொல்லல. ஏன்னா, மிஷ்கின் சார் கெட்டப் லுக் சீக்ரெட்டா இருக்கணும்னு சொல்லியிருந்தார். இதனால, எந்த பொது இடத்துக்குப் போனாலும் தலையில விக் மாட்டிக்கிட்டுத்தான் போவேன். இருந்தும், சில பத்திரிகைகள்ல இந்த செய்தி வந்திருச்சு. இதை கேள்விப்பட்டுட்டு எங்க அப்பா எனக்கு போன் பண்ணார்.பயங்கரமா கோபப்பட்டார். எங்க அப்பாவுடைய கோபத்துக்கு பின்னாடி பெரிய காரணமிருக்கு. ஏன்னா, எங்க தாத்தா இறந்தப்போ பாட்டிக்கு மொட்டை அடிச்சு விட்டுட்டாங்க. அப்போ எங்க பாட்டியோட வயசு 39. அம்மாவை மொட்டையில பார்க்க முடியாம அப்பா கீழே விழுந்து விழுந்து அழுது இருக்கார். இதனால, பொண்ணுங்களுக்கு முடியை வெட்டக் கூடாதுனு சொல்லிட்டு இருப்பார். அதனால அவர் கோபத்துல இருக்க நியாயத்தைப் புரிஞ்சிக்கிட்டேன்.

ஆனா, எப்பவும் என்னோட முடியை இழந்ததுக்காக நான் வருத்தப்படல. ஏன்னா, நல்ல கதை கொண்ட கேரக்டருக்காக முடியை இழக்குறதுல தப்பில்லைன்னு தோணுச்சு. மிஷ்கின் என்னை மொட்டை அடிக்கச் சொன்னதுக்கு சரியான, வலுவான காரணம் இருந்தது.

மிஷ்கின்!

இந்தப் படத்துல கமிட்டான நேரம் டைரக்‌ஷன் பண்ற ஐடியால இருந்தேன். இதை மிஷ்கின்கிட்ட சொன்னப்போ, 'என் படத்துல வேலைப் பார்த்துட்டு டைரக்‌ஷன் பண்ண போங்க'னார். இவர் சொன்னதுக்கான காரணம் என்னோட 'ஆரோகணம்' டைரக்‌ஷன் போதுதான் தெரிஞ்சது. மிஷ்கினுடைய டச் என் படத்துல நிறைய இடத்துல இருக்கும். நல்ல டெக்னீஷியன் மிஷ்கின். அதே மாதிரி மிஷ்கின் படத்தோட ஷாட் எடுக்குறதுக்கு முன்னாடி ரிகர்சல் மாதிரி ஸ்பாட்ல பண்ணி பார்ப்பார். அப்படி, என்னோட முதல் ஷாட்க்கு முன்னாடி ரிகர்சல் பண்றப்போ கேமராவையும் ஓட விட்டார். நான் பண்ணுன ரிகர்சல் ஷாட் பிடிச்சு போனதால உடனே டேக் ஓகேனு சொல்லிட்டு அங்கே இருந்த டைனிங் டேபிள் மேல ஏறி ஆட ஆரம்பிச்சிட்டார். அப்போதான் என் மேல எவ்வளவு நம்பிக்கை வெச்சு 'யுத்தம் செய்' படத்துல என்னை கமிட் பண்ணியிருக்கார்னு புரிய ஆரம்பிச்சது. இந்தப் பத்து வருஷத்துல இந்தப் படம் பற்றி என்கிட்ட பேசாத ஆட்களே கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்ல அம்மா மாதிரி என்னை பார்த்துக்கிட்டார் மிஷ்கின்'' என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்!



source https://cinema.vikatan.com/actress-lakshmi-ramakrishnan-talks-about-myskins-yutham-sei-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக