தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கும் மேலாக ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. 'Y Not Stuidos' நிறுவனத்தின் சஷிகாந்த், ரிலையன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்திருக்கும் படம் இது.
லண்டனில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் படமான 'ஜகமே தந்திரம்' கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து சுற்றுலாவை விளம்பரம்படுத்தும் வகையில் படம் எடுத்தால் அதற்கு இங்கிலாந்து அரசு மானியம் வழங்கும். அந்தவகையில் இந்தப்படத்துக்கும் 16 கோடி ரூபாய் மானியத்தொகை வரவேண்டியிருக்கிறது. தியேட்டரில் ரிலீஸானால்தான் அந்த மானியம் கிடைக்கும் என்கிற விதியும் இருக்கிறது. ஆனால், கொரோனா சூழல் காரணமாக அந்த விதியில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பாதக்ச் சொல்கிறார்கள். இதனால் தற்போது நெட்ஃபிளிக்ஸ் நேரடி ரிலீஸுக்கு பெரும்தொகைக்கு படம் விற்கப்பட்டிருக்கிறது.
தனுஷும், கார்த்திக் சுப்பராஜும் தியேட்டர் ரிலீஸுக்கு விரும்ப, தயாரிப்புத்தரப்போ ஓடிடி ரிலீஸுக்கு தேதி குறித்துவிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தியேட்டர்கள் திறந்து, 100 சதவிகித இருக்கைகளுக்கும் முழு அனுமதி கிடைத்துவிட்டப்பிறகும் படம் நேரடி ஓடிடி ரிலீஸுக்கு திட்டமிடப்படுவது கோலிவுட்டிலும் படம் குறித்த பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
தனுஷுக்கும், தயாரிப்பாளர் சஷிகாந்த்துக்கும் இடையே ரிலீஸ் குறித்து இன்னும் சுமூக முடிவு ஏற்படாததால் தீர்வு இன்னும் எட்டப்படாமலேயே இருக்கிறது. ''நெட்ஃபிளிக்ஸில் படத்தை விற்றாகிவிட்டது. அதனால், அந்த முடிவில் இருந்து பின்வாங்கமுடியாது. அது உலகம் முழுக்க படத்தைக் கொண்டுபோய் சேர்த்துவிடும். இந்தியாவில் மட்டும் ஓடிடி-யில் ரிலீஸாகும் அதே நாளில் தியேட்டரில் படத்தை வெளியிடலாம்'' என தயாரிப்பாளர் சொல்வதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஒரே நாளில் தியேட்டர், ஓடிடி ரிலீஸுக்கு திரையங்க உரிமையாளர்கள் ஒப்புதல் அளிப்பார்களாக என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
தியேட்டர் உரிமையாளர்களின் முடிவைப் பொறுத்தே 'ஜகமே தந்திரம்' படத்தின் ரிலீஸ் இருக்கும். இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்!
source https://cinema.vikatan.com/tamil-cinema/dhanushs-jagamey-thandhiram-aiming-for-same-day-release-in-ott-and-theaters
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக