Ad

திங்கள், 1 பிப்ரவரி, 2021

ஆண்டின் முதல் கூட்டத்தொடர்! - ஆளுநர் உரையுடன் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை! #NowAtVikatan

ஆண்டின் முதல் கூட்டத்தொடர்!

2021 -ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. கொரோனா சூழல் காரணமாக, சமூக இடைவெளியை கடைபிடிக்க, இந்த முறையும் சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஆங்கில உரையை சபாநாயகர் தனபால் தமிழில் மொழிபெயர்த்து வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைவாணர் அரங்கம் - சட்டசபை

ஆளுநர் உரையுடன் இன்றைய கூட்டம் நிறைவு பெறும். அதனை தொடர்ந்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதால், ஆளுநர் உரையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/02-02-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக