Ad

சனி, 21 நவம்பர், 2020

இவங்க பாசத்துக்கு ஈடு ஏது... பாட்டி புராணம்! #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பாட்டி

எல்லாருக்கும் பாட்டினா ரொம்ப இஷ்டம்... பெற்றது அம்மாவா இருந்தாலும் நம்மள பேணிக் காப்பது பாட்டிதானே?

பாட்டி... எண்ணெய் தேய்த்து உஷ்ணம் தணிய குளிப்பாட்டுவா... தலைவாரி பூ வெச்சு அலங்கரித்து அழகு பார்ப்பா... ஊர்வலம் கூட்டிட்டுப் போவா... அப்புறம் ஊர் கண்ணுபட்டுடும்னு மிளகாய் வற்றல சுத்திப் போடுவா.

அவ உருட்டித் தந்த சாப்பாட்டுல நெய் மணக்கும். கடைசி உருண்டையில சத்து அதிகம்னு சொல்லி வயிற்றில் நிரப்புவா. அவ கறிக்குழம்பிலோ ஊர் மணக்கும்!

திருவிழாவுக்குக் கூட்டிக்கொண்டு போவா. அங்க கேக்கிறதெல்லாம் வாங்கித் தருவா. பிஞ்சு முகம் வாடினாலும் தங்கம் மயிலுனு கொஞ்சிடுவா. வயிற்று வலினு சொல்லிடுவேன், பாட்டி வைத்தியம் இருக்குதும்பா.

பள்ளி சென்று வீடு திரும்பும்போது வாசலில் நின்று வரவேற்பா. கொஞ்சம் தாமதமானாலும் படபடப்பா.

அவ தாலாட்டும் பாட்டுல கடல் அலைகளும் உறங்கிடுமே... உன் சேலை போத்தி தூங்கும்போது குளிரும் எட்டி நின்னுடுமே..!

ஓடோடி வேலைசெஞ்சுடுவா, ஒருநாளும் ஓய்ஞ்சிடமாட்டா. அவ சாமினு கூப்பிடுவா, ஆனா அவதான் என்னைக் காக்க வந்த குலசாமி!

தொடர் வண்டிபோல சொந்தங்கள் இருந்தாலும், உன் பின்னேதான் என் கால்கள் ரெண்டும் தொடருதும்மா!

- நந்துவினோ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-story-on-grand-mothers-love

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக