Ad

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

``படேல் சிலையை எதிர்க்காதவர்கள், பேனா சிலையை எதிர்க்கிறார்கள்” - வைகோ

``படேலின் சிலை வைக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் தற்போது பேனா சிலை வைக்கும்போது எதிர்ப்பு காட்டுகின்றனர்" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ (ஃபைல் படம்)

சென்னையிலிருந்து மதுரை வந்த வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஈரோடு இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பெறும். மதச்சார்பற்ற கூட்டணி தமிழகத்தில் ஆழமாக காலூன்றி இருக்கிறது.

இந்த நேரத்தில் விக்டோரியா கௌரி என்ற பிரச்னைக்குரிய நபரை நீதிபதியாக... நேரடியாக மதச்சார்பின்மைக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா கௌரி கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் மோசமான முறையில் விமர்சனம் செய்தவர், நீதிபதியாக வருவதற்கு தகுதி அற்றவர். அவரை நியமித்தது பெரும் அதிர்ச்சியை தருகிறது. அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்களும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியோர் ஒன்றிணைந்து குடியரசுத் தலைவர் அவர்களுக்கும் தலைமை நீதிபதி அவர்களுக்கும் அறிவிப்பு வந்த உடனே கடிதம் அனுப்பி உள்ளோம்.

நீதிபதி விக்டோரியா கௌரி பதவியேற்றபோது

கலைஞர் எழுதிய சங்கத் தமிழின் அடையாளம் தான் பேனா, அவர் எழுதிய தொல்காப்பிய பூங்காதான் அந்தப் பேனா, அவர் தீட்டிய காவியங்கள் கவிதைகள் சங்கத் தமிழின் அடையாளம் தான் இந்த பேனா.

அங்கு படேலின் சிலைகள் வைக்கும் போது எதிர்ப்பு காட்டாதவர்கள் தற்போது பேனா சிலை வைக்கும் போது எதிர்ப்பு காட்டுகின்றனர்.

வைகோ (ஃபைல் படம்)

சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது. இந்த எதிர்ப்பு தேவையற்றது நிராகரிக்கப்பட வேண்டியது" என்றார் வைகோ.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vaiko-controversy-press-meet-at-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக