Ad

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

கொத்தமல்லி விலைச் சரிவு... கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கிய விவசாயிகள் கண்ணீர்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பிரதேசங்களைப்போல் ஆண்டு முழுவதிலும் குளிராக இருப்பதால், இப்பகுதிகளில் 1,200 ஏக்கர் வரையில், கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர, புதினா, பசலைக்கீரை உட்பட பல கீரை வகைகள், 900 ஏக்கர் வரையில் சாகுபடியாகிறது. இங்கு அறுவடையாகும் கொத்தமல்லி, புதினா மற்றும் இதர கீரை வகைகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மட்டுமன்றி, கர்நாடகா மற்றும் ஆந்திரா பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

கொத்தமல்லி சாகுபடி.

கடந்த, நவம்பர் தொடக்கத்தில் பெய்த மழையால், நிலத்தை தயார் செய்து டிசம்பர் மாதத்தில், அதிகப்படியான விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்திருந்தனர். அறுவடை தொடங்கியுள்ள நிலையில், கடந்த மூன்று வாரங்களாக கொத்தமல்லிக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல், விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

விதைப்பு முதல் அறுவடைப்பருவம் வரையில் செய்த செலவுத்தொகைகூட கிடைக்காத வகையில் விலை குறைந்துள்ளதால், பலரும் கூலி கொடுத்து அறுவடைகூட செய்ய முடியாமல், கால்நடைகளுக்குத் தீவனமாக அப்படியே விட்டுள்ளதுடன். பலரும் அறுவடைப் பருவத்திலுள்ள கொத்தமல்லியை உழவு செய்து அடியுரமாக மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கீரை வகைகள் சாகுபடி செய்ய சிறப்பு மானியம் வழங்க வேண்டுமென, தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடைகளுக்கு தீவனமான கொத்தமல்லி.

கொத்தமல்லி, புதினானு எந்த கீரை வகை சாகுபடி செய்தாலும், தோட்டக்கலைத்துறை சார்புல விவசாயிகளுக்கு எந்த ஒரு மானியமும் கொடுக்கறது இல்ல. தமிழக அரசு விவசாயிகளுக்கு கீரை வகைகள் சாகுபடி செய்ய மானியம் கொடுத்தா, ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும், நஷ்டமும் குறையும்’’ என, கடும் மன வேதனையுடன் தெரிவித்தார்.

வாழ்வாதாரத்தைக் காக்க, கீரை வகைகள் சாகுபடி செய்ய மானியம் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே, விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.

நஷ்டம் தான் மிச்சம்!

இது குறித்து சூளகிரி பகுதியில் கொத்தமல்லி சாகுபடி செய்துள்ள சத்தியமூர்த்தியிடம் பேசினோம், ``சூளகிரி பகுதியில, ரொம்ப வருஷமா கொத்தமல்லி சாகுபடி செய்துட்டு வர்றேன்; இப்போ, 1.5 ஏக்கர்ல ஹைபிரிட் வகை கொத்தமல்லி சாகுபடி செய்திருக்கேன்.

கொத்தமல்லி சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு அளவுல அறுவடையும், நிலையற்ற விலையும் நிலவுது. டிசம்பர் மாதம் முதல் பொங்கல் பண்டிகை வரைக்கும், அதிக தேவை இருந்ததுனால, ஒரு கட்டு கொத்தமல்லி வியாபாரிகளுக்கு, 10 ரூபாயில் இருந்து 30 ரூபாய் வரையிலும் விற்பனை செய்திருக்கோம்.

கொத்தமல்லி சாகுபடி.

வியாபாரிகள் ‘சிண்டிகேட்’!

கடந்த பருவத்துல அதிக விலை கிடைச்சதுனால, டிசம்பர் மாசத்துல அதிகப்படியான விவசாயிகள் நல்ல லாபம் கிடைக்கும்னு கொத்தமல்லிய சாகுபடி செய்திருக்காங்க. அதனால, இந்தப் பருவத்துல தேவையைவிட வரத்து அபரிமிதமா அதிகரிச்சு, மார்க்கெட்டுல விலை கடுமையா சரிஞ்சுருச்சு. இப்போ ஒரு கட்டு அதிகபட்சமா, 3 – 6 ரூபாய்க்குதான் விற்பனையாகுது. அதுலயும், வியாபாரிங்க தங்களுக்குள்ள பேசி வெச்சிட்டு வேணும்னே விலைய குறைச்சு `சிண்டிகேட்’ போட்டுக்கறதா, விவசாயிகள் கடுமையா பாதிக்கிறாங்க. ஒரு ஏக்கருல கொத்தமல்லி சாகுபடி செய்ய, விதை, விதைப்பு, களைச்செடிகள் அகற்றும் பணினு மொத்தமா 20,000 – 25,000 ரூபாய் செலவாகுது. குறைந்தபட்சமா, 6 - 8 ரூபாய்க்கு விற்பனை செய்தாதான், லாபம் கிடைக்கும். ஆனா, இந்தப் பருவத்துல கொத்தமல்லி சாகுபடி செய்து நஷ்டம்தான் மிச்சம். அறுவடை செய்து மேலும் நஷ்டம் அடையக் கூடாதுனு, கால்நடைகளுக்கு தீவனமா விட்டுட்டேன். மீதமுள்ள கொத்தமல்லியை, ரொட்டாவேட்டர் வெச்சு மடக்கி உழவு செய்து அடியுரமா மாத்திட்டேன்" என்றார்.



source https://www.vikatan.com/agriculture/in-krishnagiri-farmers-are-in-tears-due-to-the-fall-in-the-price-of-coriander

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக