கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. கோவை கார் வெடிப்பு தொடர்பாக ஏற்கெனவே தமிழகம் முழுவதும் 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் 3 மாநிலங்களில் 60 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில், கொடுங்கையூர், மண்ணடி, தென்றல் நகர் உள்ளிட்ட பல இடங்களில் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல, கோவை, நெல்லை, தென்காசி தூத்துக்குடி, மயிலாடுதுறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் தற்போது இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/nia-raid-at-60-locations-in-tamil-nadu-karnataka-kerala-in-coimbatore-car-blast-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக