வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நான் சாண்டினோ மோகன். கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டக்கல் தான் என் சொந்த ஊர். தமிழ் மீது அதீத ஆர்வம். சினிமா என்றால் கொள்ளை பிரியம். சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் இருந்தது. கடந்த 3 வருடங்களுக்கு முன்புதான் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்து, அதனை செயல்படுத்த தொடங்கினேன். எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது சற்று சுவாரசியமானது தான்.
ஆடிஷன் வழியாகத்தான் முதல் பட வாய்ப்பு கிடைத்தது. அதுவும் கொரோனா காலத்தில் நடந்த ஆடிஷனில் பங்கேற்ற போது, முதல் வாய்ப்பிலேயே `வித்இன் செகண்ட்ஸ்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னை போன்ற சாதாரன குடும்பத்தை சேர்ந்த எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.
என் முதல் மலையாளப் படம் `வித்இன் செகண்ட்ஸ்'. இயக்குநர் விஜேஷ் பி விஜயன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்தேன்.
இந்த படம் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது. படம் முடித்த கையோடு யோகா ஆசாரியா பி உன்னி ராமனிடம் யோகா கற்றுக்கொண்டு இயற்கையோடு ஒன்றிவிட்டேன். சினிமாவுக்கு அடுத்தபடியாக நான் அதிகம் நேசித்தது இயற்கையை தான்.
ஒருமுறை `தபோவனம்' என்ற இயற்கை சூழ்ந்த இடத்தில் நேரம் செலவிட்டு கொண்டிருந்த போது, என் நெருக்கிய தோழியின் தாயாரான இயக்குநர் சாய் சரண்யா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இயற்கை எப்போதுமே எனக்கு தேவையானதை என்னிடம் கொண்டு சேர்த்துவிடும் என்று நம்புபவன் நான். சாய் சரண்யா அவர்கள் ஒரு திரைக்கதையை படமாக்க திட்டம்மிட்டிருப்பதாக சொன்னார். படத்தின் கதையையும் சொன்னார். முழுக்க முழுக்க இயற்கையை சார்ந்த ஒரு கதைகளம். கதை இயற்கையோடு ஒன்றி போனதால் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
இந்தப் படத்தின் முதல் கட்ட போட்டோ சூட் முடிந்திருக்கிறது. இனி பட வேலைகள் தொடங்கிவிடும். ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். நான் நடித்த முதல் படமான `வித்இன் செகண்ட்ஸ்'ம் இயற்கை சார்ந்த படம் தான். இயற்கை ஆர்வலரான எனக்கு தொடர்ந்து இயற்கை தொடர்பான படங்கள் வந்து கொண்டு இருப்பது என் வாழ்க்கை மீது நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டது.
வெற்றியை பார்த்து சந்தோஷப்பட மாட்டேன். நார்மலான வாழ்க்கை தொடரும். இப்போ இருக்கிறதுல என்ன செய்யணும், அதை செய்து கொண்டு போய்கிட்டே இருப்பேன். பாசிட்டிவா அடுத்தது என்ன பண்ணனும் என்பதில் கவனம் செலுத்தினால் அந்த பயணத்தை ஈசியாக நாம் கொண்டு போகலாம். தமிழ் இண்டஸ்ட்ரி மிகப்பெரியது. மலையாள நடிகர்கள் தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு இரண்டாவது படமே தமிழ் படம் அமைந்திருக்கிறது. அதுவும் இயற்கை சார்ந்த கதைகளம்.
இது பெரிய மேஜிக் தான். அந்த மேஜிக்கை பற்றியும், என் மகிழ்ச்சியையும் பலருடன் பகிர வேண்டும் என்று தோன்றியது. எனவே இந்த மை விகடன் தளத்தில் இந்த பயணத்தை பகிர்கிறேன். இயக்குநர் சாய் சரண்யா மேடம் `கோடரி' படத்தின் கதை சொல்லும் போது முதலில் எனக்கு அட்ராக்ட் ஆனது இயற்கை தான். நான் பிராக்டிக்கலா திங்க் பண்ற நபர் கிடையாது. நான் ரொம்ப இயற்கையோடு கனெக்ட் ஆகும் நபர். படம் வெற்றிபெறுமா என்றெல்லாம் எனக்கு கவலையில்லை. கதைகளத்தோடு ட்ராவல் பண்ண வேண்டியதுதான்!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
source https://www.vikatan.com/oddities/my-vikatan-article-about-nature-and-cinema-lover
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக