Ad

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

தென் கொரிய கடலில் கவிழ்ந்த கப்பல் | ஷெல் நிறுவனத்துக்கு எதிராக 14,000 பேர் | உலகச் செய்திகள்

தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடலில் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் ஒன்பது பேர் மாயமாகினர். அவர்களை அந்நாட்டுக் கடலோரக் காவல்படை தேடிவருகிறது.

சீனாவில் நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் வரிசையாக நெரிசலில் சிக்கி அடுத்தடுத்து மோதியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். பலர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஸ்விஸ் ஆல்ப்ஸ் மலைகளின் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் இதுவரை கொல்லப்பட்டனர். இவர்கள் நியூசிலாந்து, சீனா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்பது தெரிய வந்துள்ளது.

ஜூபாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட கூட்டத்துடன் தெற்கு சூடனுக்கான அமைதி யாத்திரையை முடித்துக்கொண்டார் போப் பிரான்சிஸ். ஒரு இனத்திற்கு எதிரான வெறுப்பை அனைவரும் நிராகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

லண்டனின் எரிபொருள் நிறுவனமான 'ஷெல்'-ற்கு எதிராக சுமார் 14,000 மக்கள் ஒன்று திரண்டு லண்டன் உயர் நீதிமன்றத்தில் நீதி கோரி வருகின்றனர். தங்கள் பகுதியை முழுவதுமாக அந்த நிறுவனம் மாசுபடுத்தி வருவதாகப் புகார்கள் வந்துள்ளன.

சிலி நாட்டின் காட்டுத்தீயில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 800-க்கும் மேற்பட்ட வீடுகளும் சிதைக்கப்பட்டுள்ளது.

நேபாளின் எட்டி ஏர்லைன்ஸ் விமானம் 691 விபத்துக்குள்ளான இடத்திலிருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டிகளைச் சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. நேபாளின் விசாரணை அதிகாரிகளின் வேண்டுகோளகற்கிணங்க இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

நிதி சிக்கலில் உள்ள பாகிஸ்தானில், சவுதி அரேபியா அதன் முதலீடுகளை 10 மில்லியன் டாலராக உயர்த்தும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் மத்திய வங்கியில் டெபாசிட் செய்வதற்கான உச்சவரம்பை 5 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது.

மனித கடத்தல், பாலியல் வழக்குகளில் சிக்கிய பிரபலமான ஆண்ட்ரூ டேட், ரோமானியாவில் பாரன்சிக் விசாரணைக்காக அதிகாரிகள் அலுவலகத்திற்கு இரண்டாம் நாளாக ஆஜராகினார்.

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி டெல்லி வருகை தருகிறார். இது இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/ampstories/oddities/international/international-news-dated-06-02-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக