Ad

வெள்ளி, 17 டிசம்பர், 2021

`ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்டை அதிகப்படுத்தினால், 3-வது அலையை சமாளிக்க முடியுமா?' - விளக்கும் மருத்துவர்

அதிவேகமாகப் பரவிவரும் ஒமைக்ரான் தொற்று, இன்னும் சில தினங்களில் இந்தியாவில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலைக்குக் காரணமாகலாம் என்ற கணிப்பு ஆரம்பித்திருக் கிறது. இந்நிலையில், தொற்று பாதித்தவர்களைக் கண்டறிய ஆர்டிபிசிஆர் செய்து, ரிசல்ட்டுக்காகப் பல மணி நேரம் காத்திருப்பதைவிட, `ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்' செய்வதை அதிகரிக்க வேண்டும், அது ஆர்டிபிசிஆர் சோதனையைவிட விரைவாக ரிசல்ட்டை காட்டும் என்று தெரிவித்திருக்கிறது ஓர் ஆய்வு.

COVID

Also Read: பிசிஆர், ஆன்டிபாடி, ஆன்டிஜென், சிடி ஸ்கேன்... கொரோனா பரிசோதனைகள் FAQ!

மேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட்டின் ஆசிரியர்களின் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சியின்படி, இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மற்றும் ஹெல்த் அமைப்பு இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறது. ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்டின் மூலம் நிறைய தொற்றாளர்களைக் கண்டுபிடிக்கவும், மூன்றாவது அலை வந்தால் சாதுரியமாகக் கையாளவும் முடியும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆர்டிபிசிஆர் டெஸ்ட்டுக்கான வசதிகளற்ற இடங்களிலும் கோவிட் ஹாட் ஸ்பாட்டுகளிலும் இந்த முறை பரிசோதனை மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அந்த ஆய்வு சொல்வதாக, IndiaSpend இதழின் நியூஸ்லெட்டரில் தகவல் வெளியானது.

`ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்' உண்மையிலேயே உபயோகமானதுதானா... அதன் நம்பகத்தன்மை எத்தகையது என்று சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூரிடம் கேட்டோம்.

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

``இதில் குறிப்பிட்டுள்ளதுபோல `ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்' நிச்சயம் உபயோகமானதாகவே இருக்கும். குறிப்பாக, தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதிகரிக்கும் எண்ணிக்கைக்கேற்ப ஆர்டி பிசிஆர் டெஸ்ட் செய்யும் வசதி நம்மிடம் இல்லாதபோது, ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் செய்வது சரியானதுதான்.

ஆர்டிபிசிஆர் சோதனையோடு ஒப்பிடும்போது ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்டின் சென்சிட்டிவிட்டி சற்றுக் குறைவுதான். ஆனால் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்டில் மிக விரைவில் ரிசல்ட்டை தெரிந்துகொள்ள முடியும். குழுக்களில் உள்ளவர்களில் தொற்று பாதித்தவர்களைக் கண்டுபிடிக்க ரேபிட் ஆன்டிஜென் சோதனை உபயோகப்படலாம்.

Also Read: Doctor Vikatan: ஒமைக்ரான் பாதித்தவர்களைத் தனியே வைத்து சிகிச்சை அளிக்கச் சொல்வது ஏன்?

ஆனால் அதில் ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்து, அதன்பிறகும் கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் தொடரும்பட்சத்தில் ஆர்டிபிசிஆர் செய்துபார்ப்பதுதான் சரியாக இருக்கும். ஒன்றிய அரசின் சுகாதாரத்துறையும் இதையே பரிந்துரைக்கிறது'' என்கிறார் டாக்டர் அப்துல் கஃபூர்.



source https://www.vikatan.com/health/healthy/will-rapid-antigen-test-help-us-to-tackle-covid-third-wave-doctor-explains

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக