Ad

திங்கள், 1 நவம்பர், 2021

ஊரப் பத்தி தெரிஞ்சுக்கோ; Glocl-ல் பகிர்ந்துக்கோ..! ஊரையே இணைக்கும் புதிய சோஷியல் மீடியா!

சோஷியல் மீடியா வந்ததுக்கு அப்புறம், சென்னைல இருக்கும் ஒருத்தர் சிகாகோவில் இருக்கும் ஒருத்தர் கூட பேசலாம் பழகலாம், பர்த்டே விஷ் அனுப்பலாம். இப்படி நம்ம நட்பு வட்டாரங்கள் மலை தாண்டி, கடல் தாண்டி பரந்து விரிஞ்சிருக்கு. ஆனா, இதுல விந்தை என்னன்னா, சென்னைல இருக்குற எல்லாரும் கனெக்டடா இருக்குறோமானு பார்த்தா... இல்லை என்பதுதான் நிதர்சனம்!

பல்வேறு குழுக்களாக பிரிந்து, பல சோஷியல் மீடியா செயலிகளை பயன்படுத்தி, நம் ஊர்க்காரர்கள் வெவ்வேறு குரூப்பில், இங்கொன்னும் அங்கொன்னுமா சிதறிக் கிடக்கிறோமே தவிர, நாம எல்லாருமே ஒரே குரூப்பில் இல்லை. இப்படிப் பிரிந்து இருக்குற ஒரே ஊர்வாசிகளை இணைக்கும் இணையப் புள்ளியாய் வந்துள்ளது Glocl செயலி.

நியூஸ், மீம்ஸ், வைரல் அப்டேட்ஸ், கமெண்ட்ஸ், கலாய்... என்று பரபரக்கும் சோஷியல் மீடியாக்கள் மத்தியில் புருவம் உயர்த்தி பார்க்க வைக்கிறது புதுவரவான 'Glocl' ஆப். 'உலகச் செய்திகள் படிக்க எத்தனையோ வழிகள் உண்டு, ஆனால் உங்களின் பக்கத்துத் தெருவில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லையா? Glocl-க்கு வாங்க' என்கிறார் அதன் நிறுவனர் ஆண்ட்ரூ சாம்ராஜா பாண்டியன்!

இதாங்க ட்விஸ்ட்.

வழக்கமான சோஷியல் மீடியாக்களில் படங்கள், வீடியோக்கள், செய்திகள், மீம்ஸ் என்று பலவற்றைப் பகிர்வோம். Glocl ஆப்பிலும் இவை அனைத்தையும் செய்யலாம். ஆனால் Glocl-ல், நீங்கள் உங்கள் போஸ்ட் உடன் கொடுக்கும் லொகேஷன் (Location)தான் ஹீரோ!

உதாரணம்: ரம்யாவுக்கு ஃபோட்டோகிராஃபி என்றால் உயிர். DSLR-ஐத் தூக்கிக்கொண்டு பீச் பக்கம் போனால், என்ன அதிசயம்! பீச்சில் ஆள் நடமாட்டம் அன்று மிக மிகக் குறைவு! அமைதியான கடற்கரையை படங்களாய்ச் சுட்டு Glocl-ல் பதிவேற்றி லைக்குகளை அள்ளினார் ரம்யா. Glocl-ன் 'Around me' ஆப்ஷனில், இந்தப் படங்களைப் பார்த்தவர்களில் பலர் 'பீச்சில் இப்போ ஆள் குறைவு, கிளைமேட்டும் சூப்பரா இருக்கு, எடு வண்டியை' என்று கிளம்ப ஆரம்பித்தார்கள்! இதுதான் Glocl-ன் ஆற்றல். அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளின் இடம் வெரிஃபை செய்யப்பட்டு, உங்கள் அருகில் நடக்கும் விஷயங்களை அவ்வப்போது அப்டேட்ஸ் பெற உதவுகிறது Glocl.

மதுரையில் இருக்கும் உங்களுக்கு மன்னார்குடியில் என்ன நடக்கிறது என்று தெரிய, What's happening in @Mannargudi? என்று மன்னார்குடியை Tag செய்தால் போதும்! அங்கே சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நபர்களின் ஃபீடில் உங்களின் போஸ்ட் சென்று சேர்ந்துவிடும். மன்னார்குடியில் இருப்பவரில் ஏதேனும் ஒருவர் உங்களின் கேள்விக்கும் பதிலளித்து விடுவார். மதுரை டு மன்னார்குடி மட்டுமல்ல, மான்ஹாட்டனில் இருப்பவர்களைக் கூட நீங்கள் எளிதில் சென்றடையலாம்! GPS-ல் உள்ள அத்தனை லொகேஷன்களும் Glocl-ல் இருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது!

வேறென்ன அம்சங்கள் இருக்கு?

இப்படிப்பட்ட அருமையான சேவை கிடைக்கும்போது, தவறான தகவல்கள் வரவும் வாய்ப்புள்ளது அல்லவா? தவறான தகவல்களைக் களைய லொகேஷன் சரிபார்ப்பு, ஸ்பேம் ஃபில்டர், ரிப்போர்ட்டிங் ஆப்ஷன், ஓடிபி ஃவெரிபிகேஷன் என்று ஏகப்பட்ட அம்சங்களுடன் களம் காண்கிறது Glocl! உங்களுக்கு உங்களின் லொகேஷனை பிறருடன் ஷேர் செய்வது பிடிக்கவில்லை என்றால், பிறர் கண்ணில் படாமல் மறைக்கும் பிரைவசி ஆப்ஷன்களும் கொடுக்கப்படுகின்றன.

உங்கள் ஊரில் எங்கு கோவிட் தடுப்பூசி முகாம் நடக்கிறது என்பதை அதன் லோகேஷனுடன் கார்ப்பரேஷன் அப்டேட் செய்தால் போதும். ஒட்டுமொத்த மக்களுக்கும் துல்லியமாக செய்தி சென்றுவிடும். இதுபோல, எது, எங்கே, எப்போது நடக்கிறது என்கிற ஹைப்பர் லோக்கல் தகவல்களை உடனுக்குடன் தருவது Glocl-ன் மிகப்பெரிய பிளஸ்!

எல்லா கேள்விகளுக்கும் விடை!

உங்களுடைய வியாபாரம் பற்றி மக்கள் அறிய வேண்டுமா? எந்தெந்த லொகேஷனில் உள்ள மக்களை நீங்கள் சென்றடைய விரும்புகிறீர்களோ, அந்தந்த இடங்களை டேக் செய்து உங்களின் வியாபாரத்தைப் பற்றி கூறுங்கள்! பிராப்ளம் சால்வ்டு!

வீடு வாடகைக்கு விட வேண்டுமா? வாடகைக்கு வீடு வேண்டுமா? வேலைக்கு ஆள் வேண்டுமா? அல்லது வேலை வேண்டுமா? நீங்கள் ஒரு டூரிஸ்ட், எங்கு தங்கலாம் என்கிற ஆலோசனை வேண்டுமா? இல்லை எங்கோ தூர தேசத்துக்கு செல்ல இருக்கிறீர்கள், அங்கே எப்படி செல்ல வேண்டும் என்று தெரிய வேண்டுமா? உங்களின் எல்லாவித கேள்விக்கும் இங்கே பதிலை அறிய முடியும்! உங்களுக்கு என்ன வேண்டுமோ, உலகம் முழுதுமுள்ள மக்களிடம் அதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் அல்லது பெற்றுக்கொள்ளலாம்! அதுதான் Glocl.

என்னதான் கூகுளில் தேடித் தெரிந்து கொண்டாலும், அதே செய்தியை Glocl-ல் ஒரு மனிதர் சொல்லக் கேட்கும்போது அதன் உண்மைத்தன்மை ஊர்ஜிதமாகிறது. அதேபோல உலக மக்களுடன் உறவாடும் வாய்ப்பும் நமக்குக் கிடைக்கிறது! உண்மையில் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற தமிழரின் மாண்பை இன்று மெய்யாக்கி காட்டியிருக்கிறது Glocl!

சரி சரி, Glocl-ல் அக்கவுன்ட் ஓப்பன் பண்ண விருப்பமா? பிளே ஸ்டோர்/ஆப் ஸ்டோர் ரெண்டிலும் இருக்கு! இப்பவே Glocl இன்ஸ்டால் பண்ணுங்க, எப்போதும் கனெக்டடா இருங்க!

Android: https://play.google.com/store/apps/details?id=com.glocl.app

iPhone: https://apps.apple.com/in/app/glocl-a-cityzen-connect/id1561708885



source https://www.vikatan.com/sponsored/sponsor-content/glocl-app-to-connect-with-local-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக