Ad

ஞாயிறு, 28 நவம்பர், 2021

வேரியன்ட் `ஓமிக்ரோன்': நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வேரியன்ட் `ஓமிக்ரோன்' தொடர்ந்து வேகமாகப் பரவி வருவதாலும், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா எண்ணிக்கை சமீபகாலத்தில் அதிகரித்து வருவதாலும் அங்கு அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா

அமெரிக்காவின் நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், தங்களுடைய மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மற்றும் கொரோனோ வேரியன்ட் ஓமிக்ரான் மாறுபாட்டின் அச்சுறுத்தல் காரணமாகவும் அவசரக்கால நிலையை அறிவிப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

இதுகுறித்து கவர்னர் கேத்தி ஹோச்சுல் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தற்போது இருக்கும் குளிர்காலத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நியூ யார்க் மாநிலத்தில் புதிய ஓமிக்ரோன் மாறுபாடு இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், பல நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அரசு சுகாதார நலத்துறைக்கு உதவ இன்று நான் ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டேன். கொரோனாவின் அடுத்த வேரியண்டான ஓமிக்ரோன் நம்மை நெருங்குவதற்குள் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், மருத்துவமனைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்" அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சக்தியை விரைவாகப் பெற முடியும், என்றும் அவர் கூறியிருக்கிறார்.

முன்னதாக, உலக சுகாதார நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், கொரோனாவின் புதிய வேரியன்ட் மிக அபாயகரமானது. இந்த மாறுபாடு அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டிருக்கிறது, மற்ற கொரோனா வேரியண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த மாறுபாட்டின் மூலம் மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஆரம்ப சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்த மாறுபாட்டின் எண்ணிக்கையானது கிட்டத்தட்டத் தென்னாப்பிரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது, என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/international/new-covid-19-variant-omicron-new-york-declares-state-of-emergency

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக