போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவருடன் அவர் நண்பர் அர்பாஸ் மெர்ச்சண்ட் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று நிபந்தனை விதித்தது . அதன் படி விசாரணைக்கு ஆஜரான ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட் உள்ளிட்டவர்களிடம் முதல் இரண்டு வாரங்கள் மட்டும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தற்போது, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்று ஆஜராகிவிட்டு உடனே வந்துவிடுகின்றனர்.
அந்த வகையில், இந்த வாரமும் வெள்ளிக்கிழமை ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகத் தென் மும்பையிலிருக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, ஆர்யனின் நண்பர் அர்பாஸ் மெர்ச்சண்டுடன் அவர் தந்தை அஸ்லாம் மெர்ச்சண்ட்டும் வந்திருந்தார். அர்பாஸ் அலுவலகத்தில் விசாரணைக்குச் சென்றுவிட்டு, வெளியில் வந்த போது பத்திரிக்கையாளர்கள் கூடி நின்றனர். அதைக் கண்ட அர்பாஸின் தந்தை அவரை, பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்க போஸ் கொடுக்கும்படி தன் அருகில் அழைத்தார். முதலில் அது புரியாமல் தந்தையின் அருகில் சென்ற அர்பாஸ், பிறகு அவர் தந்தை மீடியா கேமராக்களை நோக்கிய போது, அவர் புகைப்படத்துக்காகத் தான் அழைத்திருக்கிறார் என்பது விளங்கியது. அதையடுத்து, உடனே நிறுத்துங்கப்பா என்று எரிச்சலுடன் கூறிவிட்டு, போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் அர்பாஸ் வேகமாகச் சென்று காரில் ஏறிக்கொண்டார்.
ஆர்யன் கான் தனியாகத்தான் வந்திருந்தார். அவர் வெளியில் பத்திரிக்கையாளர்கள் நிற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் வெளியில் வரும் போது பத்திரிக்கையாளர்களைக் கண்டுகொள்ளாமல் நேராகத் தனது காரில் ஏறிப்புறப்பட்டுச்சென்றார். தொடர்ச்சியாக ஆஜராகி வருவதால் ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தும் படி கோரி ஆர்யன் கான் தரப்பில் விரைவில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யத் திட்டமிட்டிருக்கின்றனர்.
Also Read: ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது ஏன்?! - உயர் நீதிமன்ற தீர்ப்பில் வெளியான தகவல்
source https://www.vikatan.com/news/india/aryan-khans-friend-arbaaz-merchant-gets-irritated-as-his-father-makes-him-pose-at-ncb-office
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக