Ad

திங்கள், 29 நவம்பர், 2021

`1950-க்குப் பிறகான வில்லங்க சான்றிதழ்; இனி ஆன்லைனிலேயே பெறலாம்!'- பதிவுத்துறையின் அறிவிப்பு என்ன?

தமிழ்நாட்டில் 1950-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட சொத்து வில்லங்க விவரங்களை ஆன்லைனில் பார்க்கும் வசதி விரைவில் கொண்டுவரப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது.

வில்லங்கம் பார்த்தல்

Also Read: பவர் பத்திரம் ரத்து:`ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒப்புதல் தேவையில்லை' - பதிவுத்துறையின் புது உத்தரவு என்ன?

ஏற்கெனவே 1987-ம் ஆண்டு வரையிலான சொத்து விவரங்கள் கணினி மயமாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 1975-ம் ஆண்டு வரையிலான சொத்து விவரங்களை பெறும் வசதி கடந்த 2018-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. வில்லங்க விவரங்களை ஆன்லைன் மூலம் இலவசமாக பார்ப்பதுடன் பிரதி எடுத்துக் கொள்ளும் வசதியும் வந்தது. இந்நிலையில், அது தற்போது 1950-ம் ஆண்டு வரையிலான சொத்து விவரங்கள் ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தவுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், ``1.1.1950 முதல் 31.12.1974 வரையில் உள்ள ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை மண்டலத்தில் 15,10,799 ஆவணங்களும், கடலூரில் 23,49,220 ஆவணங்களும், கோவையில் 17,58,802 ஆவணங்களும், மதுரையில் 41,02,469 ஆவணங்களும், சேலத்தில் 20,28,518 ஆவணங்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 42,37,916 ஆணவங்களும், தஞ்சாவூர் மண்டலத்தில் 19,87,827 ஆவணங்களும், திருச்சி மண்டலத்தில் 23,18,159 ஆவணங்களும், வேலூர் மண்டலத்தில் 19,87,402 ஆணவங்கள் என மொத்தம் 2,22,81,112 ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் பதிவேற்றம் செய்யும் ஆவணங்களை 100% சார் பதிவாளர்களும், 5% மாவட்ட பதிவாளர்களும், 2% டிஐஜிக்களும் சரிபார்க்க வேண்டும். இந்த ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் ரூ.11.50 கோடியும், 2022-23 -ம் நிதியாண்டில் ரூ.11.50 கோடி செலவிடப்படுகிறது.

பத்திரம்

Also Read: வருமான வரிச்சுமையைக் குறைக்கும் இந்த வழிகள் பற்றித் தெரியுமா? - 51

இணையதளம் மூலம் இந்த ஆவணங்களை பெறுவதற்கு கட்டணம் விதிக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.2 கோடி வருவாய் அரசுக்கு கிடைக்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் வில்லங்க சான்றிதழ் பெற கட்டணம் விதிக்கப்படுகிறது. இது நேரில் சென்று விண்ணப்பித்து பெறுவதை விட மிகக் குறைவாக இருக்கும்.

வில்லங்க சான்றிதழ் பார்க்க: https://tnreginet.gov.in/portal/



source https://www.vikatan.com/business/news/registration-dept-to-provide-encumbrance-certificate-online-registered-from-1950

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக