Ad

புதன், 3 நவம்பர், 2021

வாழ்வில் ஒளியேற்றும் தீபாவளி நன்னாளில் கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம் எது?

உலகின் துயர்கள் எல்லாம் தீருவதற்கு ஏதேனும் வழிபாடு உள்ளதா என்று சனாதன முனிவர் கவலையோடு சிந்தித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தீர்க்கதமஸ் என்னும் முனிவர் உலகில் ஜோதி மயமான இறைவனை வழிபாடு செய்வதே அதற்கு ஒரே வழி என்றும் அவ்வாறு வழிபட உகந்த நன்னாள் தீபாவளித் திருநாளே என்றும் தெரிவித்தார். இதைக்கேட்டு மகிழ்ந்த சனாதன மகரிஷி, அந்த வழிபாட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த தீர்க்கதமஸ் விரிவான அதன் வழிபாடுகளை எடுத்துக்கூறினார்.

"ஐப்பசி மாதம் எனப்படும் துலா மாதத்தில் தேய்பிறை திரயோதசியில் பிரதோஷ பூஜை செய்து, யம தீபம் ஏற்றி வழிபடவேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசியன்று எண்ணெய் தேய்த்து நீராடவேண்டும்.

தீபாவளி

அந்த நாளில் எண்ணெய்யில் மகாலட்சுமியும், சீயக்காய்ப் பொடியில் சரஸ்வதியும், தண்ணீரில் கங்கையும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், புஷ்பத்தில் யோகினிகளும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்புப் பலகாரத்தில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் ஆவாஹனமாகி அருள் பாலிப்பர் என்பது ஐதிகம்.

ஆகவே அன்று, சூரியோதயத்துக்கு முன் இந்தப் பொருள்களைப் போற்றுவதுடன், சிரஞ்சீவிகளான அஸ்வத்தாமா, மகாபலி, வியாசர், கிருபர், பரசுராமன், அனுமன், விபீஷணன் ஆகியோரையும் வழிபட, அவர்களது ஆசியால் துன்ப இருளில் இருந்து விடுபடலாம்” என்று எடுத்துரைத்தார்.

இத்தகைய சிறப்பு மிக்க தீபாவளி இந்த ஆண்டு தீபாவளி, அமாவாசை, கேதார கௌரி விரத நாள், லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டிய நாள் ஆகிய அனைத்தும் நாளை (4.11.21) அன்றே கொண்டாடப்பட இருக்கிறது.
கங்கா தரிசனம்!

கவலைகள் தீர்க்கும் கங்கா ஸ்நானம்

தீபாவளி விடியற்காலை எண்ணெய்க் குளியலை 'கங்காஸ்நானம்' என்று புனிதமாகச் சொல்வார்கள். 'வீட்டுக் கிணற்றின் நீரிலோ அல்லது குழாயில் வரும் நீரிலோகூட தீபாவளியன்று நீராடினால் புனித கங்கையில் நீராடிய பலன் கிட்டும்' என்பது ஆன்றோர் வாக்கு. எனவே தவறாமல் எல்லோரும் நாளைக் காலையிலேயே நீராடுவது சிறப்பு. புத்தாடை உடுத்துவது, பலகாரங்கள் செய்வது எல்லாம் அவரவர் வசதியைப் பொறுத்தது. ஆனால் தவறாமல் காலைப் பொழுதிலேயே வீட்டில் விளக்கேற்றி அந்த ஈசனை வழிபட வேண்டும். தீப ரூபத்தில் அந்த நாளில் மகாலட்சுமி எழுந்தருள்வாள். எனவே தவறாமல் வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். இந்த நாளில் அமாவாசையும் சேர்ந்து வருவதால் பகலில் முன்னோர் வழிபாடும் இல்லாதவர்களுக்கு உதவுவதும் மிகவும் புண்ணியம் சேர்க்கும் காரியமாகும்.

சங்கடங்கள் தீர்க்கும் சஷ்டி விரதம்

முருக பக்தர்களுக்கு கந்த சஷ்டி மிகவும் முக்கியமான பண்டிகை. வழக்கமாக கந்த சஷ்டித் திருவிழா தீபாவளிக்கு மறுநாள் தொடங்கும். இந்த ஆண்டு தீபாவளி அன்றே (4.11.21) கந்த சஷ்டி தொடங்கிவிடுகிறது. எனவே தவறாமல் முருக வழிபாடு செய்வதும் அவசியம். சஷ்டிவிரதம் ஆறுநாள்களும் இருப்பவர்கள் தவறாமல் நாளையே அந்த விரதத்தைத் தொடங்கிவிடுவது நல்லது.

கங்கா ஸ்நானம் செய்வதற்கு ஏற்ற நேரம்:

அதிகாலையில் 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்கு முன்பு எண்ணெய் தேய்த்து, நீராடிவிட வேண்டும். 4.30 மணிக்கு முன்பாகவும் நீராடலாம். ஆனால் ஆறுமணிக்குப் பின் நீராடுவதைத் தவிர்ப்பது நல்லது.

கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்க உகந்த நேரம்:

மாலை 5.00 மணி முதல் 6.30க்குள்



source https://www.vikatan.com/spiritual/gods/the-auspicious-time-to-have-the-holy-bath-during-this-deepavali

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக