Ad

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

Tamil News Today: கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின!

கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின!

கல்லூரி மாணவர்கள்

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வழியாக பள்ளி, கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வந்தன. கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பள்ளிகளிலும் 9 முதல் 12- ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு செப்.1 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. நவம்பர் 1-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் இன்று கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tamil-news-today-04-10-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக