கோவிட் பாசிட்டிவ் ஆன நண்பருடன் மிக அருகிலிருந்தபடி சில மணி நேரத்தைச் செலவிட்டேன். நான் கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டு விட்டேன். இந்நிலையில் நானும் கோவிட் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டுமா?
- கோமதி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.
``நீங்கள் கோவிட் டெஸ்ட் எடுக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டுவிட்டதால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்புக்குக் காரணமான ஆன்டிபாடிக்கள் நிச்சயம் உருவாகியிருக்கும். ஆனால் கோவிட் பாசிட்டிவ் என உறுதிசெய்யப்பட்ட நபருடன் நெருக்கமாகவும் சில மணி நேரமும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளதால் உங்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் முதல் வேலையாக உடனடியாக 5 முதல் 8 நாள்களுக்கு உங்கள் ஆரோக்கியத்தை கவனியுங்கள். சந்தேகம் இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
அந்த நாள்களில் உங்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கின்றனவா என பாருங்கள். இவை சாதாரண காய்ச்சலுக்கான அறிகுறிகள் போல அல்லாமல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தாலோ, மேற்சொன்ன அறிகுறிகளுடன் உடல்வலி, சோர்வு, தளர்ச்சி ஆகிய மூன்று அறிகுறிகளும் சேர்ந்துகொண்டாலோ நீங்கள் கொரோனா டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம்.
Also Read: Covid Questions: அறிகுறிகள் இல்லாத கோவிட் நோயாளிகளையும் பாதிக்குமா கறுப்பு பூஞ்சைத் தொற்று?
இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர் என்பதால் உங்களுக்கு ஒருவேளை கோவிட் பாசிட்டிவ் என வந்தாலும் பயப்படத் தேவையில்லை. அது உங்களுக்கு மிகத் தீவிர நோயாக மாற வாய்ப்பில்லை."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/i-am-fully-vaccinated-but-had-contact-with-covid-positive-person-should-i-take-test
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக