விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் VAT.கலிவரதன். முகையூர் எனும் சட்டமன்ற தொகுதி இருந்தபோது, அங்கு பாமக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக பதவி வகித்தவர். சில வருடங்களுக்கு முன்பாக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாமக-வில் இருந்து விலகி பாஜக-வில் ஐக்கியமானார். தற்போது விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவராக இருக்கிறார்.
கடந்த வருடம் பாஜக-வைச் சேர்ந்த மாவட்ட பெண் நிர்வாகி ஒருவர், இவர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கட்சிப் பிரமுகர் ஒருவரின் மனைவி, இவர் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்தார். இப்படி தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் இவர்தான், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த சர்ச்சைக் கருத்துக்கள் கொண்டு வளம் வரும் ஆடியோவில் பேசியது என, கட்சி வட்டாரத்துக்குள் சலசலப்பு உருவாகியிருக்கிறது.
அந்த ஆடியோவில் பேசும் நபர் ஒருவர் , "20 பெண்களும், பாமக-வில் இருந்து பிரிந்து வரும் 50-க்கும் மேற்பட்டோரும் அண்ணாமலை தலைமையில் கட்சியில் இணைவதற்கு ஏற்பாடு பண்ணியிருக்கு அண்ணே" என்கிறார்.
மறுமுனையில் பேசுபவர் ( VAT.கலிவரதன் என்று கூறப்படுகிறது), "அண்ணாமலையும் வர மாட்டாரு. திருவண்ணாமலையும் வராது. பதவிக்கு மரியாதை கொடுங்க. நான் வந்தாதான் கட்சியில சேரனும். அண்ணாமலை என்ன கடவுளா? உனக்கு, நான் கடவுளா இல்ல அவர் கடவுளா? என் தலைமையில கட்சியில் சேரச் சொல்லுங்க. என்னை விட பெரிய ஆளு யாரும் கிடையாது" என்கிறார்.
Also Read: விழுப்புரம்: `அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை’ - மாவட்ட பா.ஜ.க தலைவர் மீது மகளிரணிச் செயலாளர் புகார்
இந்த சர்ச்சை ஆடியோ குறித்து விளக்கம் கேட்பதற்காக VAT. கலிவரதனை தொடர்பு கொண்டோம். "இதைப்பத்தி 'செல்'லுல சொல்ல முடியாது சார். எல்லாமே ரெக்கார்ட் பண்றாங்க. அதனால எதுவாக இருந்தாலும் நேரிலேயே பேசுறேன்" என்று கூறி எங்கு பேசலாம் என்றும் குறிப்பிடாமல் அழைப்பை வைத்துவிட்டார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/villupuram-bjp-controversial-audio-about-state-bjp-leader-annamalai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக