Ad

திங்கள், 4 அக்டோபர், 2021

நீளமா முடி வளர்த்தா தப்பா? - உண்மையை உணர்த்தும் குறும்படம்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அண்மையில் தமிழகத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியது. வீதியில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் அழைத்து "ஏன் முடி இவ்வளவு நீளமாக வைத்திருக்கிறாய்" என்று இளைஞரின் தலைமுடியை இழுத்து விசாரணை செய்வது போல் ஒரு காவலர் நடந்து கொண்டார்.

ஒருவருடைய தலை முடி ஏன் இவ்வளவு நீளமாக இருக்கிறது என்று கேள்வி கேட்கும் உரிமையை காவல்துறைக்கு யார் கொடுத்தது?

ஒரு வகையில் தனி மனித சுதந்திரத்தில் அப்பட்டமாக இது மீறப்படுவதாகும்.

மேற்கண்ட செய்தியை இணையத்தளத்தில் வாசிக்கும்போது எனக்கு ஆஸ்கர் நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

Representational Image

Hair love ஆறு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த animated short film கடந்த 2020 ஆண்டு ஆஸ்கார் நிகழ்ச்சியில் சிறந்த Animated short story -க்கான ஆஸ்கார் விருதைத் தட்டிச் சென்றது. ஆஸ்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் டிஆண்ட்ரே அர்னால்ட். Hair love படத்திற்கு விருது அளிக்கப்பட்டதும் மேடையில் அதன் இயக்குனர் "hair representation matter deeply in cartoon characters" என்றார். Black hair is very important to us என்று கூறி டிஆண்ட்ரே அர்னால்ட் என்ற மாணவரின் பெயரை குறிப்பிட்டார்.

அவர் வேறுயாருமில்லை டெக்ஸாஸ் மாகாண ஹியூஸ்டன் நகரில் உள்ள ஒரு பள்ளியின் ஆண்டு விழாவில் நீளமான முடி வைத்திருந்ததால் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட மாணவர். தங்களுடைய பள்ளியில் நீளமான முடி வைத்திருக்க அனுமதி இல்லை என்ற நல்லொழுக்க வழிமுறைகள் (Code for conduct) இருப்பதாக கூறி அவருடைய முடியை வெட்ட கூறியது பள்ளி நிர்வாகம். முடி வெட்டினால் தான் பள்ளிக்கூடம் வர வேண்டும் என்றால் அந்தப் பள்ளக்கூடமே வேண்டாம் என்று முடிவெடுத்தார் டிஆண்ட்ரேவின் அம்மா. அதோடு மட்டுமல்லாமல் அப்பள்ளியின் மீது வழக்கு தொடர்ந்தார். விஷயம் வெளியே வந்தது. அமெரிக்கா முழுவதும் அது செய்தியானது.

ஹாலிவுட் அல்லது மேற்கத்திய கலாச்சாரத்தில் வெளிவரும் சிறுவர்களுக்கான கார்ட்டூன் படங்களில் தலைமுடியின் நிறத்தை வைத்து கதாநாயகி, கதாநாயகன், இளவரசர், இளவரசி, வில்லன் போன்ற தோற்றத்தை கண்டறிந்துவிடலாம். முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர்களின் முடி நிறத்தை செம்பட்டை (மெரூன்) நிறத்திலும். எதிர்மறைக் கதாபாத்திரம் கொண்டவர்களுக்கு கருப்பு நிறத்திலும் இருக்கும்படி அமைத்திருப்பார்கள். இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால் நல்ல நடவடிக்கைகளை செய்பவர்களின் முடி செம்பட்டை நிறத்திலும். கெட்ட காரியங்களை செய்பவர்கள் தலைமுடி கருப்பு நிறத்திலும் இருக்கும். இவ்வகையான தலைமுடியின் நிறத்தில் இருக்கும் வேறுபாட்டை தகர்த்து எறிந்தது hair love சிறுகதை கார்டூன் படம்.

Hair Love

டிஆண்ட்ரே குடும்பம் கரீபியன் தீவுகளில் இருந்து அமெரிக்கா வந்தவர்கள். மேற்கிந்தியத் தீவுகளின் கலாச்சாரத்தை கொண்டவர்கள். அவர்கள் கலாச்சாரத்தின் வழக்கத்தில் முடியை வளர்ந்து வரும் தலைமுடியை dreadlocks செய்து வைப்பார்கள். மறைந்த பாப் இசை கலைஞர் பாப் மார்லியை போல. 2019 க்குப் பிறகு அமெரிக்காவில் 11 மாகாணங்களில் (கலிபோர்னியா, நியூயார்க், நியூஜெர்ஸி, வெர்ஜினியா, மேரிலாந்து, கணட்டிக்கட், கொலராடோ, நியூ மெக்சிகோ, நெப்ராஸ்கா, வாஷிங்டன், டெல்வேர்,) தலைமுடியை அடிப்படையாக வைத்து பாகுபாடுகள் பார்ப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னை டெக்சாஸ் மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு டெக்சாஸ் மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகள் இங்கேயும் இதுபோன்ற தடையைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைகள் செய்தார்கள்.

இன்றைய புதிய அமெரிக்கா என்பது பல்வேறு நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த மக்களால் கட்டமைக்கப்பட்டது. இப்படி வெவ்வேறு நாடுகளிலிருந்து வரும் மக்கள் அவர்களுடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அப்படியே இங்கே பின்தொடர்கிறார்கள். அதற்கு அமெரிக்காவில் முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மதம், மொழி, இனம், பாலினம் இவற்றுக்கு எதிராக செயல்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில் சில பிற்போக்குத்தனமான சிந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்வதில்லை. கடந்த ஆண்டு மாசச்சூசெட்ஸ் மாகாணத்திலுள்ள பிராண்டைஸ் பல்கலைக்கழகம் (The Brandeis University) சாதி அடிப்படையில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதை தடை செய்திருக்கிறது.

அதாவது, the university is banned caste based discrimination -ஐ பல்கலைக்கழக ஒழுங்கு விதிமுறைகளில் இதை இணைத்திருக்கிறார்கள். நாம் எண்ணிப் பார்க்கலாம் இந்தியாவை விட்டு பல ஆயிரம் மைல்கள் கடந்து இருக்கும் அமெரிக்காவில் சாதி அடிப்படையில் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா?

ஆம்.

Hair Love

சாதிய அடிப்படையில் உயர்கல்வி பயில வந்த ஒரு மாணவர் சமர்பித்த ஆய்வு கட்டுரையை காரணம் ஏதுமின்றி நிராகரிக்கப்பட்டது. பின்னர் விசாரணை மேற்கொண்டதில் மாணவரின் ஆசிரியர் சாதிய கண்ணோட்டத்தில் மாணவர்களிடம் நடந்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததாலயே அவர்கள் இதனை சேர்த்திருக்கிறார்கள். தெற்காசியாவில் இருந்துவரும் மக்கள் குறிப்பாக இந்தியாவில் இருந்து வேலைவாய்ப்பிற்காகவும் மேற்படிப்பிற்காகவும் வரும் மக்கள் தங்களோடு சாதியையும் நிழல் போல அழைத்து வருகிறார்கள் என்பதே உண்மை.

தனிமனித சுதந்திரத்தில் யாரும் தலையிட அனுமதி இல்லை என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது அமெரிக்க நாடு. கடந்த மாதம் தலைமுடியை வைத்தே மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு வினோதமான சம்பவம் நடந்தது. ஆரம்பப்பள்ளி மாணவியின் தலைமுடி நீளமாக இருக்கிறது என்று கூறி ஆசிரியர் ஒருவர் அக்குழந்தையின் தலைமுடியை பெற்றோரின் அனுமதி இல்லாமல் கத்தரியால் வெட்டி இருக்கிறார். விஷயம் பெற்றோர்களுக்கு தெரிய வர அப்பள்ளியின் மீது (இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்) மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார்கள். ஆனால் இது இனவெறி அடிப்படையில் நடைபெறவில்லை என்று ஆசிரியர் விளக்கம் கொடுத்தார்.

சரி, கதையை கூற நான் மறந்துவிட்டேன். காலையில் தனது படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறாள் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுமி. தலையில் ஒரு குளிர் காலத்தில் தலையில் அணியும் குரங்கு தொப்பி போன்ற தொப்பியை அணிந்திருப்பார். அன்றைய நாள் அவளுக்கு முக்கியமானது. அவசர அவசரமாக குளியல் அறைக்குள் செல்வாள். கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்து ‌தொப்பியை கழட்டுவாள். உடனே அவளது அடர்த்தியான தலைமுடி முகம் தெரியாத அளவுக்கு மறைத்துவிடும். பல்வேறு ஸ்டைலில் தலைமுடியை வடிவமைப்பு செய்ய வேண்டும் என்பதே அவளது குறிக்கோள். நேரம் ஆகிக் கொண்டே இருக்கும். அவளது அப்பா வந்ததும் நேரமாகிவிட்டது என்பார். என் தலைமுடியை பாருங்கள் என்று செய்கை காட்டுவாள் மகள். தந்தை உடனே பல வகைகளில் முயற்சி செய்து கடைசியில் மீண்டும் தொப்பியை அவள் தலையில் வைக்க முயற்சி செய்வார். தொப்பி எனக்கு வேண்டாம் என்று கோபம் கொள்வள்.

தலைமுடியை வழித்து விட சீப்பை வைத்து பார்ப்பார். சீப்பு தலைமுடியின் உள்ளே போகவே போகாது. Love hair என்ற பெயரில் சிறுமியின் அம்மா அவளை வைத்து முடி அலங்காரம் செய்வது குறித்து வீடியோ வைத்திருப்பார். அதை பார்த்துக் கொண்டே தந்தை முடியை செம்மையாக அவளுக்கு ஏற்றவாறு கட்டி விடுவார். பின்னர் இருவரும் அவளுடைய அம்மாவை பார்க்க செல்வார்கள். அம்மாவுக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டிருக்கும். தலைமுடி இல்லாமல் மொட்டை அடித்திருப்பார். உனக்கு தலைமுடி இல்லையென்றாலும் நீயே எனக்கு அரசி என்று படம் வரைந்து சென்றிருப்பாள் சிறுமி. அவ்வாறே கடைசி காட்சி முடியும்!


- பாண்டி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-hair-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக