Ad

புதன், 6 அக்டோபர், 2021

உ.பி: ”இறந்துபோன கட்சிக்கு உயிர் கொடுக்க அரசியல் செய்கிறது காங்கிரஸ்” - வானதி சீனிவாசன்!

கோவை தெற்கு தொகுதி மக்களின் கோரிக்கைகள், மனுக்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரைச் சந்தித்தார்.

ஆட்சியர், வானதி சீனிவாசன்

சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசு நிறைய மாற்றங்களைக்கொண்டு வந்திருக்கிறது. விவசாய மக்களுடன் இணைந்து அதை செயல்படுத்த வேண்டும் என்பது எங்கள் நீண்ட கோரிக்கை.

100 வேலை திட்டத்தால் முழுமையாக பயனில்லை என்று நாங்கள் சொல்ல மாட்டோம். அதேநேரத்தில், அதை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு ஆராயும். உத்தரப்பிரதேச விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெளிவாக தெரிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத்

அந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இதுபோன்று எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன. விரைவில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு தேர்தல் வர இருக்கிறது.

Also Read: ``பிரதமர் மோடி கோழையைப்போலச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்" - பிரியங்கா காந்தி சாடல்!

அதன் காரணமாக, செத்துப்போன காங்கிரஸ் கட்சிக்கு உயிர்கொடுக்க முடியுமா என்று மக்களின் உயிரற்ற உடலை வைத்து அரசியல் செய்வதை வேதனையாக பார்க்கிறோம். பிரியங்கா காந்தி பிரச்னையில்லாத பல சமயங்களில், அவர் அம்மாவின் தொகுதி, அவர் சகோதரர் தோற்றுப்போன தொகுதிக்கு வந்திருக்கிறார்.

பிரியங்கா காந்தி

அப்போது அரசாங்கம் தடுக்கவில்லை. ஆனால், கலவரம் ஏற்படும் என்ற சூழலில் மட்டும் போகிறார் என்றால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய கடமை உள்ளூர் அரசாங்கத்துக்கு இருக்கிறது.” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vanathi-srinivasan-slams-congress-over-uttarpradesh-farmers-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக