Ad

திங்கள், 4 அக்டோபர், 2021

அனுமதியின்றி வீடுகளில் ஒட்டப்படும் தேர்தல் சுவரொட்டிகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி, வேட்பாளர்களும், அந்தந்த கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இந்த விதிகளை எந்த வேட்பாளரும் மீறக்கூடாது.

விதிமுறை

ஆனால், தேர்தல் நடைபெறும் பல இடங்களில் தேர்தல் நடத்தை விதி மீறப்படுவதாகவும். அது குறித்து அந்தப் பகுதி தேர்தல் அலுவலரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியதில் உள்ள நடுவக்கரை கிராம ஊராட்சியில் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் விதிப்படி, எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ, தனிநபர் இடத்திலோ அல்லது பொது இடத்திலோ எழுத்துப்பூர்வ அனுமதியின்றி கொடிக் கம்பங்களைக் கட்டவும், பதாகைகளை வைக்கவும், அறிவிப்புகளை ஒட்டவும், வாசகங்களை எழுதவும் தொண்டர்களை அனுமதிக்கக்கூடாது. ஆனால், அந்த பகுதியில் பலரின் வீடுகளிலும் யாருடைய அனுமதியும் பெறாமல் வீட்டின் சுவர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

சுவரொட்டிகள்

பல்வேறு கட்சியின் கட்சி வேட்பாளர்களும் அவர்களது வீட்டில் சுவரொட்டி ஒட்டியது குறித்து, சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் அந்தப் பகுதி தேர்தல் அதிகாரியிடம் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியருக்குப் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியப் போக்கில் செயல்படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்.?

Also Read: உள்ளாட்சித் தேர்தல்: சூடுபிடிக்கும் களம்... 9 மாவட்டங்களில் வெற்றிவாய்ப்பு யாருக்கு அதிகம்?



source https://www.vikatan.com/government-and-politics/politics/candidates-violating-the-election-rules-and-people-suffer-on-it

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக