கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு, முக்கியப் பங்கு வகிக்கும் பணத்தை சேர்த்துவைக்க எண்ணியவர்கள் பலர். அந்த எண்ணத்தைச் செயலாக்கியவர்கள் சிறப்பாக வாழ்கின்றனர்.
நாம் அனைவரும் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம், ஆனால் ஒரு சிலரே அவ்வாறு இருக்கிறார்கள். பணத்தை சேமிப்பது என்பது ஒவ்வொரு நபருக்கும் பழக்கமாக இருக்க வேண்டிய ஒன்று! ஆனாலும், பலர் குறைவாக சேமிக்கவும் அதிக செலவு செய்யவும் முனைகிறார்கள்.
எதிர்கால நலனுக்காக சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பணத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, உழைத்து பெரும் பாடுபட்டு சேமிக்கும் பணத்தை என்ன செய்வது என்று விழிக்கும் பலருக்கு வழிகாட்டவே இந்த 'பணம் செய்ய விரும்பு' இ-புக்.
‘கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’ என்று சொல்லி கேட்டிருப்போம். இது ஒருவிதத்தில் உண்மைதான். சாப்பாடு, துணிமணி, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை. அப்படி எல்லாவற்றிற்கும் பணம் தேவை என்றால் அந்த பணத்தை சேமித்தால் அல்லது முதலீடு செய்தால் தானே தேவைக்கு பணம் என்ற நிலை வரும். அதை பூர்த்திசெய்ய நமக்கு வழிகாட்டுகிறார்கள் பொருளாதார நிபுணத்துவம் பெற்ற நாகப்பன் - புகழேந்தி.

கோடீஸ்வரராக எந்த வழியில் செல்வது நல்லது என்பதில் தொடங்கி, குடும்ப உறுப்பினர்களான அம்மா, அப்பா, தம்பி, தங்கை, பிள்ளைகள் என அனைவரையும் பொருளாதார இலக்கை நோக்கிய பயணத்தில் எவ்வாறு சேர்த்துக்கொள்வது? முதலீட்டு நிறுவனங்களின் திட்டங்களில் எவ்வாறு பங்கேற்பது? பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களின் போது என்ன செய்ய வேண்டும்? போன்ற நிதி சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் படையல் வைத்து இருக்கிறார்கள்.
இந்த புத்தகத்தில் புத்திசாலித்தனமாக பணத்தை எப்படி சேமிப்பது? பணத்தை எப்படி முதலீடு செய்து பெருக்குவது என்று பல விஷயங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. இதைப் படிப்பதன் பயன் இதற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு பணம் செய்தீர்கள், பொருளாதார சுதந்திரத்தை அடைந்தீர்களா என்பதில் தான் உள்ளது இப்புத்தகத்தின் வெற்றி!
சுருங்கச் சொல்வதென்றால், பணம் சம்பாதிப்பதை கலையாக, வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள உதவும் மந்திரமே இந்த இ-புக்! உங்களுக்காக முற்றிலும் இலவசமாக இந்த இ-புக்கை வழங்குகிறோம். இதற்காக, நீங்கள் செய்யவேண்டிய எளிதான வழிமுறை கீழே தரப்பட்டுள்ளது
இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி?
நீங்கள் டவுன்லோடு செய்யும் இந்த இ-புக் விகடன் App-ல் உள்ள Library-ன் EBook பகுதியில் சேவ் ஆகியிருக்கும். அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம்.
source https://www.vikatan.com/news/announcements/panamseyya-virumbu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக