Ad

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

`` பாஜக மீது கை வைத்தால்; வட்டியும் முதலுமாகத் தான் திருப்பிக் கொடுக்கப்படும்" - அண்ணாமலை

வங்கதேசத்தில் இந்து கோயில்கள், பக்தர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, கோவை இஸ்கான் கோயிலில் சங்கீர்த்தன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்தியாவில் சிறுபான்மையினருக்குக் கொடுக்கப்படும் உரிமைகள், பிற நாடுகளில் கொடுக்கப்படுவதில்லை.

ஆர்ப்பாட்டம்

Also Read: 'ஒவ்வொரு நாளும் ஓர் ஆவணம்... அவர் வாயிலேயே உண்மை வரும்!' - செந்தில் பாலாஜிக்கு சவால்விடும் அண்ணாமலை

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் 100 கோடி ரூபாய்க்கு மேல், எந்த நிறுவனம் டர்ன் ஒவர் செய்கிறதோ அங்குதான் ஸ்வீட் வாங்குவோம் என்கிறார். கார்ப்பரேட் அரசியல் யார் நடத்துகின்றனரோ அவர்கள்தான் இப்படி சொல்வார்கள்.

சாமானியர்கள் யாரும் டர்ன் ஓவரை கேட்டு ஸ்வீட் வாங்க மாட்டார்கள். ஊழலுக்காக இப்படி நடக்கின்றனரா எனத் தெரியவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிமீது சொன்ன புகாருக்கும் நடவடிக்கை இல்லை. ஐந்து மாதங்களில் இவ்வளவு பிரச்னைகள்.

முதல்வர் ஸ்டாலின்

இந்த விவகாரங்களில் எல்லாம் முதல்வர் ஏன் மௌனம் காக்கிறார் என்று தெரியவில்லை. தமிழக மக்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக மின்சார வாரியம் இயங்கவில்லை. அமைச்சருக்கு கமிஷன் கொடுப்பதற்காக மட்டுமே மின்சார இயங்கி வருகிறது.

மின்சாரம் வருவதில்லை என அணில் மீது பழிபோட்டனர். தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் போடுவதற்காக மின்சார வாரியத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தடுப்பூசித் தட்டுப்பாடு என்று கூறிவந்தனர்.

செந்தில் பாலாஜி

இப்போது தமிழக அரசு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசியைக் கையிருப்பாக வைத்திருக்கின்றனர். அரசியலுக்காக மட்டுமே பஞ்சப்பாட்டு பாடுகின்றனர்.

லஞ்சம் இல்லாமல் இந்த அரசு செயல்படுகிறது என்று யாரையாவது சொல்ல சொல்லுங்கள். ஒரு குடும்பம் நன்றாக இருப்பதற்காக, நேர்மையாக வேலை செய்பவர்களை ஊழல்வாதியாக மாற்றுகின்றனர். மாற்று அரசியல் என்று சொன்னார்கள் என்றால், இந்த அரசு முதலில் ஊழலை நிறுத்த வேண்டும்.

ஊழல்

ஊழல் செய்தவர்கள் எங்கே இருந்தாலும், தூக்கிக் கொண்டு வருவோம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இது தமிழகத்துக்கும் பொருந்தும். பா.ஜ.க 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். அவர்களுக்கு எல்லாம் மோடி யாரென்று தெரியவில்லை. பாஜக பற்றித் தெரியவில்லை.

இந்த அமைச்சர்கள் எல்லாம் ஒரு தொகுதிக்குள் இருந்து அரசியல் செய்பவர்கள். நாங்கள் தேசியவாதிகள். தமிழக மக்கள், தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று வந்தவர்கள். எந்தக் காரணத்துக்காகவும், எங்கள் வாயில் இருந்து தனிமனித தாக்குதல் வராது. `கை வைக்கிறோம்' என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.

சேகர்பாபு

Also Read: ‘விஜய பாஸ்கர் ரெய்டில் சிக்காதவர்கள் முதல், பகையை மறக்காத அண்ணாமலை வரை!’ கழுகார் அப்டேட்ஸ்

கை வைப்பதற்காகக் காத்திருக்கிறோம். வைத்து பார்த்தால்தானே பாஜக என்னவென்று தெரியும். தைரியம் இருந்தால் வைப்பார் என்று நினைக்கிறேன். செந்தில் பாலாஜி தைரியம் இருந்தால் நீதிமன்றத்துக்கு போகட்டுமே.

சமூக வலைதளங்களில் பாஜக பெண் நிர்வாகியை ஆபாசமாகப் பேசுகின்றனர் என்று ஆதாரத்துடன் புகார் அளித்தோம். நேர்மையான காவல்துறையாக இருந்தால் அனைவர் மீதும் சரிசமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக மீது கை வைத்தால் சாதாரணமாக எல்லாம் வரமாட்டோம். வட்டியும் முதலுமாக தான் திருப்பிக் கொடுக்கப்படும்.

அண்ணாமலை

முதல்வர் இப்போதாவது விழித்து கொள்ள வேண்டும். தமிழக பாஜக இப்படித்தான் இயங்க வேண்டும் என்று மோடிஜியின் முழு உத்தரவு இருக்கிறது. ஒரு தொகுதிக்குள் அரசியல் செய்பவர்கள் எல்லாம் எங்களை மிரட்டக் கூடாது.” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/bjp-leader-annamalai-met-press-people-at-coimbatore-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக